-எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
தேசிய
வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி நூலக
அபிவிருத்திக்குழு அதன் பொறுப்பாசிரியரும் உதவி அதிபருமான
எம்.எம்.நிஸார்தீன் தலைமையில் நேற்று (24) புத்தக கண்காட்சியொன்றினை ஒழுங்கு
செய்திருந்தது.
கல்வியமைச்சின்
சுற்று நிரூபத்திற்கமைய மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில்
நாடு தழுவிய ரீதியில் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் ” தேசிய வாசிப்பு
”மாதத்தினை பாடசாலைகளில் அமுல்படுத்தி வருகின்றது.
கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புத்தக கண்காட்சியினை திறந்து வைத்தார்.
பிரதி
அதிபர்களான எம்.எஸ்.முஹம்மட் , ஏ.பி.முஜீன் உள்ளிட்ட ஆசிரியர்களும் நூலக
உத்தியோஸ்தர்களும் ஊழியர்களும் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டதுடன்
கண்காட்சியினை மாணவர்களும் ஆசிரியர்களும் பார்வையிட்டனர்.
சிரேஸ்ட
ஆசிரியர் ஏ.ஸி.எம்.பழீல் தன்னால் எழுதி வெளியிடப்பட்ட நூல்களின்
தொகுதியொன்றினை இந்த புத்தக கண்காட்சியின் போது அதிபரிடம் வழங்கி வைத்தார்.
கல்வியமைச்சினால்
வழங்கப்பட்ட நிதி ஓதுக்கீட்டின் மூலம் கொழும்பில் இடம்பெற்ற சர்வதேச
புத்தக கண்காட்சியின் போது கல்லூரி நூலக அபிவிருத்திக்குழுவினால் கொள்வனவு
செய்யப்பட்ட நூல்களே மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் பார்வைக்காக
வைக்கப்பட்டிருந்தது.
Post a Comment