கல்முனை
ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் ஏற்பாட்டில்
வருடாந்த "டாக்டர்ஸ் போரம் ஒன்றுகூடல்" நிகழ்வு மிக சிறப்பாக நடை பெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) கலதாரி ஹோட்டலில் ஒழுங்கு செய்யப்படிருந்த
இந்நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்களான கொழும்பில் வாழும் சில
வைத்தியர்கள் விசேட அழைப்பின் பேரில் கலந்து சிறப்பித்தனர்.
பழைய
மாணவர் சங்க கொழும்புக் கிளையின் தலைவர் பொறியியலாளர் M.M.M. மைசான்
தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் பல வைத்தியர்களுடன் சில கொழும்புக்
கிளையின் நிருவாக சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். டாக்டர் சனூஸ்
காரியப்பர் இப் போரத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் தேவை குறித்து
விளக்கமளித்தத்துடன் ப. மா. சங்க கொழும்புக் கிளையின் உப தலைவர்
பொறியியலாளர் M.C.M. மபீல் உடன் இணைந்து விசேட கலந்துரையாடலை
நெறிப்படுத்தினார்.
இதன்போது
கல்லூரியில் இப் போரத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்த சாத்தியமான பல்வேறு
செயற்திட்டங்கள் அடையாளங் காணப்பட்டதுடன், எதிர்கால செயற்திட்டங்கள், இதன்
விரிவாக்கம் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டன. இதனை தொடர்ந்து
முன்னெடுத்து செல்வதற்கு தேவையான ஒரு செயற்க்குழுவும் அமைக்கப்பட்டது.
இப்போரத்தினூடாக
கல்லூரியில் உயிரியல் பிரிவு மாணவர்களுக்கான விசேட செயற்திட்டங்கள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை ஓர் விசேட அம்சமாகும். இதன் மூலம்
மருத்துவத் துறையை தெரிவு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கையினை
அதிகரிப்பதுடன் பல்கலைக்கழக அனுமதியினை மேம்படுத்தும் முயற்சிகள்
மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும்
இந்நிகழ்வில் கலந்து கொண்ட வைத்தியர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி
கௌரவிக்கப்பட்டதுடன் செயலாளர் தௌபீக் எம் கான் இவ்வொன்று கூடலை
நெறிப்படுத்தியதுடன் நன்றியுரையும் நிகழ்த்தினார். பழைய மாணவர் சங்க
கொழும்புக் கிளை பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் செயற்திட்டத்தில் இவ்வாறான
போரங்களை அமைத்து அதன் வருடாந்த ஓன்று கூடல்களையும் நடாத்தி கல்லூரியின்
அபிவிருத்தியில் அனைவரையும் பங்குதாரர்களாக மாற்றி வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.



Post a Comment