-ஏ.பி.எம்.அஸ்ஹர்-மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய மனித உரிமைகள் பாதுகாப்புக்குழுவின் கூட்டம் இன்று (13) நடைபெற்றது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப்பிராந்திய இணைப்பாளர்
இஸ்ஸதீன் லத்தீப் தலைமையில் கல்முனைப்பிராந்திய அலுவலகத்தில் நடை பெற்ற
இந்நிகழ்வில் இப்பிரதேசத்திலுள்ள சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும்
பெண்களைத் தலைவர்களாகக்கொண்ட குடும்பங்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின்
வாழ்வாதாரங்களை விருத்தி செய்வதற்கான வழிவகைகள் தொடர்பாகவும் இங்கு
விரிவாககக் கலந்துரையாடப்படடது.
இதில் இக்குழுவின் உறுப்பினர்களான கலாநிதி அனுஸியா பிரதிக் கல்விப்பணிப்பாளர் வீ.ரீ.சகாதேவராஜா திட்டமிடல்.அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.எம்.அஸ்ஹர் உட்பட இக்குழுவின் உறுப்பினர்கள் பலரும் கலந்து ககொண்டனர்.



Post a Comment