-எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
கல்முனை வின்னர்ஸ்
கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு பெரு விழா நேற்று (30) ஞாயிற்றுக் கிழமை கல்முனை அல் அஸ்ஹர்
வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கல்லூரி அதிபர்
யு.எல்.எம்.ஹிலால் தலைமையில் இடம்பெற்ற மேற்படி பரிசளிப்பு விழாவில் கல்முனை ஸாஹிரா
தேசியக் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் பிரதம அதிதியாகவும் , அல் அஸ்ஹர் வித்தியாலய
அதிபர் ஏ.எச்.அலி அக்பர் , விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர்
ஏ பாவா , கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி உதவி அதிபர் எம்.ஏ.சலாம் , சிரேஸ்ட ஆசிரியர்
எம்.ஐ.எம்.அஸ்ஹர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும்
கலந்து கொண்டனர்.
அண்மையில்
பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற பரீட்சைகளின் அடிப்படையில் சிறந்த அடைவு மட்டத்தைப் பெற்றுக்
கொண்ட சுமார் 350 மாணவர்கள் இந்த நிகழ்வின் போது கிண்ணங்கள் வழங்கியும் கற்பித்த ஆசிரியர்கள்
பதக்கங்கள் அணிவித்தும் கௌரவிக்கப்பட்டனர்.
இலங்கை
ஒலிபரப்பு
கூட்டுத்தாபன பிறை எப்.எம்.சிரேஸ்ட அறிவிப்பாளரும் , தொலைக்காட்சி பகுதி
நேர செய்தி
வாசிப்பாளரும் ஆசிரியருமான ஏ.எல்.எம்.நயீம் இந்த நிகழ்வின் போது விசேட
பாராட்டுதலுக்கு
உட்படுத்தப்பட்டதுடன் இக் கல்லூரியின் பழைய மாணவர்கள் கல்லூரியின் எதிர்கால
வளர்சிக்காக ஒரு தொகை நிதியினையும் கல்லூரி அதிபர் யு.எல்.எம்.ஹிலாலிடம்
வழங்கியும் வைத்தனர்.
இந்நிகழ்வில்
பெரும் திரளான மாணவர்களின் பெற்றோர்களும் பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment