Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | உலக சுகாதார தினத்தையொட்டி ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட நிகழ்வு !

-அஷ்ரப் ஏ சமத்-
2016 உலக குடியிருப்புத்தினத்தின் முப்பதாவது ஆண்டு நிறைவையொட்டி 'அனைவருக்கும் புகலிடம்' தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட சுகலாதேவிகம மாதிரிக் கிராமம் நேற்று (03) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

சுகலாதேவிகமவில் 24 வீட்டுப்பயனாளிகளுக்கு வீட்டு உரித்துக்களை கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது.

திம்புலாகல தேர்தல் தொகுதியிலுள்ள முன்பிள்ளை பராய பராமரிப்பு நிலையங்களுக்கான நீர் வடிகட்டித் தொகுதிகள் வழங்கப்பட்டதுடன் 'சில்பசவிய' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பயிற்சிக்கான பொருட்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

இங்கு உரையாற்றிய  ஜனாதிபதி - 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று முன்தினம்  ஊகடகங்களில் தெரிவித்திருந்த விடயத்திற்கு நான் பதில் கூற வேண்டிய கடமைப்பாடு உள்ளது.   அவா் காலத்தில் நிர்மாணித்த கட்டிடங்களையே   நான் திறந்து வைப்பதாகச் சொல்லியிருந்தாா். இந்த அரசினால் ஒருபோதும் நிர்மாணிக்க வில்லை எனவும் அவா் சொல்லியிருந்தாா்.   ஆனால் மகிந்த ராஜபக்ச - முன்னாள் ஜனாதிபதி  சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில்  நெலும் பொக்குன திட்டத்தினை சீன அரசுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டு அதனை  சந்திரிக்கா  அடிக்கல் நாட்டி நிர்மாணப்பணிகளை ஆரம்பதித்து  வைத்தாா். அந்த நிகழ்வுக்கு நானும் போயிருந்தேன். அடுத்த சில மாதங்களுக்குள்   மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானாதும்.  அவா் உடன் அந்த அடிக்கல்லை புல்டேசா் மெசின் ஊடக அதனை தகா்த்து அவா் பெயரைச் சூட்டி  மீண்டும் அவா் அடிக்கல்லை நாட்டினாா் அந்த நெலும் பொக்குன கட்டிடத்தின் வீதிக்கும் அவரது பெயரைச் சூட்டினாா்.  ஆனால் அத்திட்டத்தினை கொண்டு வந்தவா் முன்னாள் ஜனதிபதி  சந்திரிக்கா அம்மையாா்.  ஆனால் நான் ஒருபோதும் எந்த ஜனாதிபதியும் பெயரையும்  அகற்ற வில்லை.  பதவிகள் வரும் போகும். ஆனால் திட்டங்கள் கட்டிடங்கள் பொதுமக்களது பாவணைக்காகும். என ஜனாதிபதி அங்கு தெரிவித்தாா் 

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவா்களினால் இந்த நாட்டில் பாரிய வீடமைப்புத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.  அவர் நடவடிக்கையினால் தான் உலக குடியிருப்பு அமையத்தினை ஜக்கிய நாடுகள் சென்று சகல நாடுகளை இணைத்து இன்று கொண்டாப்படுகின்ற உலக குடியிருப்புத் திட்டத்தினை  அமுல்படுத்தினாா். எனவும் ஜனாதிபதி அங்கு உரையாற்றினாா்.
 
அத்துடன் உலக குடியிருப்பு பற்றி மாணவா்களின் கல்வி அறிவினை வளா்க்கும் நோக்கில் பாடாசலை மட்டத்தில் சிர்திரம், கட்டுரை பேச்சு மற்றும் நாடகம் போன்ற போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவா்களுக்கு ஜனாதிபதி விருதும் பணப்பரிசில்களும் ஜனாதிபதியினால்   வழங்கி வைக்கப்பட்டன. 

வீடமை்பபு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித்பிரேமதாசாவின்  அறிவுறுத்தலின்படி வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் வழிகாட்டலின்  கீழ்  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை உலக குடியிருப்பு தினத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவு வைபவத்தினை நாடு தழுவிய ரீதியில் வீடமைப்பு மற்றும் குடியிருப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ்  கொண்டாடுகின்றது. அக்டோபா்  03 ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரையிலான கால கட்டத்தில் குடியிருப்பு வாரம் ” என அரசு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  அந்த வாரத்தின் நாட்டின் சகல மாவட்டங்களிலும்  பல்வேறுவகையான வீடமைப்ப மற்றும் குடியிருப்பு  நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட காரியாலயங்கள்  ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.    அமைச்சா் சஜித் பிரேமதாச 200 மாதிரிக் கிராமங்களை நாடு முழுவதிலும்  நிர்மாணித்து வருகின்றாா். அதில் 35 வது கிராமம் இன்று ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.   
 

Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget