கல்முனை ஸாஹிரா
தேசியக்கல்லூரி பழைய மாணவர்
சங்க கொழும்பு கிளையின் முன்னாள் தலைவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியுமான டாக்டர்
ஸனூஸ் காரியப்பர் ஒழுங்கு செய்திருந்த க.பொ.த.
உயர்தர விஞ்ஞான வகுப்புகளில் உயிரியல் துறையினை மாணவர்கள் தெரிவு செய்வதனை ஊக்குவிக்கும் வகையில்
இவ்வருடம் க.பொ.த.சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவர்களின்
பெற்றோர்களுக்கான கலந்துரையாடல் கல்லூரி காரியப்பர் மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.
கல்லூரி
அதிபர்
பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்லூரியின்
பழைய மாணவர்களும் வைத்தியர்களுமான ஸனூஸ் காரியப்பர் எஸ்.எம்.ஏ.அஸீஸ்
எம்.எம்.அல் அமீன் ரிஸாத் ஆகியோர் வளவாளர்களாக கலந்து
கொண்டனர்.
எமது பிரதேசத்தில்
கடந்த சில வருடங்களாக க.பொ.த.உயர்தர விஞ்ஞான உயிரியல் துறையில் மாணவர்கள் இணைந்து கல்வி
கற்பதில் ஆர்வம் குறைந்து கணிதம் தொழில்நுட்ப
துறைகளில் அதிக கவனத்தை செலுத்தி வருகின்றனர். இதனால் அண்மைக்காலமாக மருத்துவ துறைக்கும்
அதனை சார்ந்த ஏனைய துறைகளுக்கும் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதில் குறைவு ஏற்பட்டுள்ளமை
அவதானிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்திற் கொண்டு இக் கல்லூரியில் கல்வி கற்று வைத்தியர்களாக
நாடு தளுவிய ரீதியில் சேவையாற்றிவரும் வைத்தியர்கள் இணைந்து இவ்வருடம் டிசம்பர் மாதம்
நடைபெறவுள்ள க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்து விஞ்ஞான துறையை தெரிவு செய்யும்
மாணவர்களை உயிரியல் பிரிவில் கல்வி கற்பதனை ஊக்குவிக்கும் வகையில் இந்த பெற்றோருடனான
கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இக்கலந்துரையாடலில்
பெரும் எண்ணிக்கையில் பெற்றோர்கள் கலந்து கொண்டமை இத்திட்டத்தினை எதிர்காலத்தில் வெற்றிகரமாக
முன்னெடுத்துச் செல்வதற்கு உதவியாக அமையுமென வைத்தியர்களும் கல்வியாளர்களும் கருத்து
தெரிவித்தனர்.
இன்று பற்றாக்குறையாக
உள்ளதும் உயர்தரத்தில் உயிரியல் பிரிவை தெரிவு செய்வதால் உயிர்காக்கும் சமூகத்திற்குப்
பயனுள்ளதுமான மருத்துவத்துறை ( ஆங்கில யுனாணி
ஆயள்வேத அக்யுபன்ச்சர் …. ) பல்வைத்தியம்
மிருக வைத்தியம் மருத்துவ ஆய்வு கூட பரிசோதகர் எக்ஸ் கதிர் பரிசோதகர் ஈ.ஸீ.ஜி. பரிசோதகர் மருத்துவ தாதி
மருந்தகர் பார்மசிஸ்ட் நுனுக்குகாட்டி பரிசோதகர் கண் பரிசோதகர்
காது பரிசோதகர் உடற்பயிற்சியாளர் பொது
சுகாதார பரிசோதகர் விஞ்ஞானத்துறை விரிவுரையாளர் விவசாய விஞ்ஞான ஆராய்ச்சியாளர் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்…. போன்ற துறைகளுக்கு
மாணவர்கள் செல்லக் கூடிய வசதிகளும் வாய்ப்புகளும் நிறைந்துள்ளதாக வளவாளர்கள் பெற்றோர்களுக்கு
அறிவுரை வழங்கினார்கள்.
Post a Comment