கிழக்கு
மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 220 மில்லின் ரூபாய் முதலீட்டில்
நிறுவப்பட்டுள்ள இரண்டாவது பாரிய நவீன அரிசி ஆலை ஆரையம்பதி பிரதேச செயலாளர்
பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பிரதேசத்தில் பி.சி.கே பற்றிக்கலோ (பிறைவட்
லிமிட்டட்) எனும் பெயரில் 23-11-216 நேற்று புதன்கிழமை திறந்து
வைக்கப்பட்டது.
பி.சி.கே பற்றிக்கலோ (பிறைவட்
லிமிட்டட்டின் முகாமைத்துவப் பணிப்பாளர் பி.சந்திரகுமார் தலைமையில்
இடம்பெற்ற மேற்படி அரிசி ஆலை திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும்,மாவட்ட செயலாளருமான
திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக கிழக்கு
பல்கலைக்கழகத்தின் பீடாதிபதியின் துனைவியார் திருமதி புஷ்பலதா
ஜெயசிங்கம்,ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி,கிழக்கு மாகாண
சபை உறுப்பினர் கிருஸ்ணபிள்ளை, ஆரையம்பதி பிரதேச சபை செயலாளர்
கிருஸ்ணபிள்ளை ,சிரேஷ்ட சட்டத்தரணி ரி.சிவநாதன்,காத்தான்குடி பொலிஸ்
நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர,ஹற்ற நெஷனல் வங்கியின் பிராந்திய
சிரேஷ்ட முகாமையாளர் கென்டியா ஜெயராஜ்,சம்பத் வங்கியின் பிராந்திய
முகாமையாளர் ஏ.என்.டேவிட் உட்பட மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின்
தலைவரும்,ஈஸ்ட் லகூன் ஹோட்டல் உரிமையாளருமான எம்.செல்வராஜா, மட்டக்களப்பு
வர்த்தக சங்கத்தின் பொருளாளர் வி.ரஞ்ஜிதமூர்த்தி என பலரும் கலந்து
கொண்டனர்.
இதன் போது பி.சி.கே பற்றிக்கலோ அரிசி ஆலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸினா ல் அரிசி ஆலையின் பெயர் பலகை நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இங்கு
பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்
திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸின்; சேவையைப் பாராட்டி பி.சி.கே பற்றிக்கலோ
(பிறைவட் லிமிட்டட்டினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது பாரிய அரிசி ஆலையை ஆரம்பித்த அதன்
முகாமைத்துவப் பணிப்பாளர் பி.சந்திரகுமார் மட்டக்களப்பு வர்த்தக
சங்கத்தினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
Post a Comment