Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

இறை வேதமான குர்ஆனை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது - பாராளுமன்றில் பிரதி அமைச்சர் ஹரீஸ்

-அகமட் எஸ். முகைடீன், ஹாசீப் யாசின்-
இறை வேதமாகிய புனித திருக்குர்ஆனை கேள்விக்குட்படுத்த எவருக்கும் முடியாது. குர்ஆன் பற்றி  தேவையற்ற வியாக்கியாணங்களை முன்வைத்து இனவாதத்தை தூண்டுகின்றவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்றத்தில் சூளுரைத்தார்.

பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு தொடர்பான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் நேற்று (28) கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் தொடர்ந்து பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில்.

ஊடகச் சுதந்திரம் என்ற போர்வையில் இந்த நாட்டின் தெற்கில் உள்ள சில அடிப்படைவாதிகள் சிறுபான்மை மக்களின் மதச் சுதந்திரத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனால் பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் ஏனைய மதங்கள் தொடர்பான தவறான புரிதலை ஏற்படுத்த விளைகின்றனர். இது விரும்பிய மத்ததை பின் பற்றுகின்ற மதச் சுதந்திரத்திற்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கையாக காணப்படுகின்றது.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவருக்கு நேற்றைய தினம் இஸ்லாமியர்களின் புனித மார்க்கமான இஸ்லாம்இ பிற மதங்களை நிந்தனை செய்வதை பிரதான கோட்பாடாக கொண்டுள்ளது எனக்கூறி குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் கோரி பொதுபல சேனா அமைப்பினர் கடிதம் எழுதியுள்ளார். இது தேவையற்ற வீண் பிரச்சினையினை உண்டுபண்ணும் விதமாக அமைந்துள்ளது.

முஸ்லிம்கள் தம் உயிரிலும் மேலாக நேசிக்கின்ற புனித அல்-குர்ஆன் இறைவனால் அருளப்பட்ட வேத நூலாகும். இவ்வேத நூலை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது.

முஸ்லிம்கள் மிகவும் நேசிக்கின்ற புனித குர்ஆனை கேள்விக்குட்படுத்துவதன் மூலம் முஸ்லிம்களின் உள்ளங்களை காயப்படுத்திஇ உணர்வுகளைத் தூண்டிஇ ஆத்திர மூட்டுவதன் ஊடாக பாரிய பிரச்சினைகளை இந்நாட்டில் தோற்றுவித்து நாட்டினை வேறு திசைக்கு இட்டுச் செல்ல முனைகின்றனர்.

நாட்டில் நல்லாட்சி மலர்வதற்கு பெரும் பக்க பலமாக இருந்த இச்சமூகத்தின் மீது மத அடக்கு முறைகளை திணிப்பதன் மூலம் இச்சமூகத்தை சீண்டுபவர்களுக்கு எதிராக அரசு உடனடியாக தலையிட்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறனவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தேவையான சட்டம் இல்லையென்றால் அதற்கு ஏதுவான புதிய சட்டத்தை இயற்றி இவ்வாறானவர்களை அடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.   
https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget