Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | கிழக்கைச் சேர்ந்த புலம் பெயர் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு -1 கோடிக்கு மேல் புலமைப்பரிசில்!


-பழுலுல்லாஹ் பர்ஹான்-
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் இயங்கிவரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த புலம் பெயர் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பணிப்பாளர் உபுல் தேஷப்பிரிய தலைமையில் இடம்பெற்ற மேற்படி புலம் பெயர் பெற்றோர்களின் தமிழ்,முஸ்லிம்,சிங்கள பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல கலந்து கொண்டதோடு கௌரவ அதிதியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.விதானகே, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளர் பெர்ணான்டோ,அதன் மேலதிக பொது முகாமையாளர் திருமதி ஷேகா பிரேமசிரி அதன் நலன்புரி பிரிவுக்கான பிரதி பொது முகாமையாளர் தரங்க ஹெட்டி ஆராச்சி என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல உள்ளிட்ட ஏனைய அதிதிகளினால் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த புலம் பெயர் பெற்றோர்களின் 636 பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் நிதியும் ஏனைய பிரிசில்களும் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வெளிநாட்டில் தொழில்புரியும் புலம் பெயர் பெற்றோர்களின் பிள்ளைகளில் தரம்5 புலமைப்பரிசில்பரீட்சையில் சித்தியடைந்த 207 பிள்ளைகளுக்கு 15000.00 ரூபா வீதமும் ,கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த 376 பிள்ளைகளுக்கு 20000.00 ரூபா வீதமும் ,கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 53 பிள்ளைகளுக்கு 30000.00 ரூபா வீதமுமாக மொத்தம் 12215000.00 1கோடி இருபத்திரெண்டு இலட்சத்து பதினையாயிரம் ரூபாய் புலமைப்பரிசில் நிதி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 
https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget