முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். ஜீ.எல்.பீரிஸின் தலைமையில் ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணி எனும் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கட்சி, கடந்த ஓகஸ்ட் மாதம் எமது ஶ்ரீ லங்கா சுதந்திர முன்னணி (அபே ஶ்ரீ லங்கா ஜாதிக பெரமுண) எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்ட விமல் கீகனகேவின் தலைமையிலான கட்சியாகும்.
விமல் கீகனகேவின் தலைமையில் இயங்கிய இக்கட்சி, இதற்கு முன்னர் இக்கட்சி ஶ்ரீ லங்கா தேசிய முன்னணி எனும் பெயரில் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
செயலாளராக சாகர காரியவசம் இயங்கி வரும் இக்கட்சி மலர் மொட்டு சின்னத்தைக் கொண்டுள்ளது.
ஆயினும் குறித்த கட்சி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தேவை கருதி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, அக்கட்சிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைவராகும் வாய்ப்புக் காணப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment