-அஷ்ரப் ஏ சமத்-
ஸ்ரீலங்கா ஹிரா
பௌன்டேஸன் அனுசரனையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நாட்டில் உள்ள
பள்ளிவாசல்களில் கடமையாற்றும் இமாம்கள், கதீப்மாா்களுக்கான இலவச உம்ரா
பொதித் திட்டத்தின் 100 பேர் அடங்கிய 5வதும், இறுதியுமான குழு இன்று (3)
வியாழக்கிழமை புனித மக்கா நகா் நோக்கி புறப்பட்டனா்.
ஹிரா பவுண்டேசனின்
தலைவரும், புனா்வாழ்பு புனரமைப்பு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான
எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் மற்றும் மட்டக்களப்பு கெம்பஸ் பணிப்பாளா்
பொறியியலாளா் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோா் இக்குழுவை வத்தளையில் உள்ள
அக்பா் பள்ளிவாசலில் வைத்து ”முஸாபஹா” செய்து வழியனுப்பி வைத்தனா்.
இங்கு உரையாற்றிய இராஜாங்க அமைச்சா் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தாவது -
எனது
வேண்டுகோளுக்கினங்க சவுதியில் உள்ள ஒரு அரபிய சேக் ஒருவரே இத் திட்டத்திற்கு
உதவி செய்தாா்.
ஏற்கனவே 400 பேர் சென்றுள்ளனா். இன்று செல்லும் 100 பேர் கொண்ட இக்குழுவுடன் 500
பேர் இலவச உம்ரா கடமைப் பொதி முடிவடைந்துள்ளது.
நாடளாவிய
ரீதியில் பல்வேறு சமுகப் பணிகளை செய்து வரும் பள்ளிவாசல்களில் கடமையாற்றும்
கதீப்மாா்களை கௌரவிக்கும் நோக்குடன் இலவச உம்ரா திட்டத்தினை
அறிமுகப்படுத்தி மக்காவின் கஃபத்துல்லாவை காணாத 55 வயதினை புர்த்தி செய்த
இதுவரை காலமும் ஹஜ் அல்லது உம்ரா கடமையினை நிறைவேற்றாத இமாம்கள்
கதீப்மாா்கள் 500 பேர் நாடளாரீதியில் தெரிவு செய்யப்பட்டு அனுப்பி
வைக்க்பபட்டுள்ளனா். என அவர் தெரிவித்தார்.
Post a Comment