சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை, கல்முனை அஷ்ரப்
ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைத்து அங்கு முறிவு வைத்திய விசேட பிரிவு
ஸ்தாபிக்கப்படும் என சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் தெரிவித்தார்.
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி
எம்.எம்.எஸ்.ஜெசீலுல் இலாஹி தலைமையில் வைத்தியசாலையின்
அபிவிருத்திக்குழுவும் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் உறுப்பினர்களும்
இணைந்து பிரதி அமைச்சரோடு வைத்தியசாலையினை தரம் உயர்த்துவது தொடர்பாக
கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதி அமைச்சர்
தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்
இந்த வைத்தியசாலையை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த
வைத்தியசாலையுடன் இணைத்து, அவ் வைத்தியசாலையின் இரண்டாவது ஒரு பிரிவாக
செயற்படுத்துவதற்கும் இங்கு சகல வசதிகளும் கொண்ட முறிவு வைத்திய விசேட
பிரிவை உருவாக்குவதற்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் எதிர்காலத்தில் வைத்தியசாலைக்கான ஆளணியும் வளங்களும் இன்னும் அதிகரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
தற்போது சாய்ந்தமருது வைத்தியசாலை கட்டடத்தில்
எந்தவொரு நோயாளியும் இல்லாமல் வார்ட்டுகள் மூடிக்கிடக்கின்றன இதனை பார்க்கின்றபோது கவலையாக இருக்கின்றது இந்த பெறுமதியான சொத்தை தொடர்ந்தும் வீணடிப்பதற்கு இடமளிக்க முடியாது. அதனால் இனிவரும் காலங்களில் அது முறிவு வைத்தியத்திற்கான விசேட வைத்தியசாலையாக மாற்றியமைக்கப்படும்.
எந்தவொரு நோயாளியும் இல்லாமல் வார்ட்டுகள் மூடிக்கிடக்கின்றன இதனை பார்க்கின்றபோது கவலையாக இருக்கின்றது இந்த பெறுமதியான சொத்தை தொடர்ந்தும் வீணடிப்பதற்கு இடமளிக்க முடியாது. அதனால் இனிவரும் காலங்களில் அது முறிவு வைத்தியத்திற்கான விசேட வைத்தியசாலையாக மாற்றியமைக்கப்படும்.
இதன் அடிப்படையில் இங்கு இரண்டு அதி நவீன சத்திர சிகிச்சை
கூடங்களும் ஒரு எக்ஸ்ரே பிரிவும் உடனடியாக நிர்மாணிக்கப்படும். முறிவு
வைத்தியத்திற்கான அதி நவீன உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இங்கு
ஏற்படுத்தப்படும்.
அதேவேளை எதிர்காலத்தில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த
வைத்தியசாலையில் CT Scan வசதியும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்
மார்பு சிகிச்சைக்கான விசேட பிரிவும் ஏற்படுத்தப்படும்.
எதிர்காலத்தில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையையும்,
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையையும் மையப்படுத்தி ஒரு பிராந்திய பொது
வைத்தியசாலையை உருவாக்க திட்டமிட்டுள்ளேன் எனவும் கருத்து தெரிவித்தார்.
தற்போது அம்பாறை நகரில் மாத்திரமே பொது வைத்தியசாலை எமது
கரையோர பிராந்திய மக்களுக்கும் அது போன்ற வசதியை ஏற்படுத்திக் கொடுத்து
சுகாதாரத்துறையில் தன்னிறைவான சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான சூழலை உருவாக்க
வேண்டியுள்ளது எனவும் பிரதி அமைச்சர் பைசால் காசிம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வைத்தியசாலை வைத்தியர்கள், அபிவிருத்தி சபையினர்
மற்றும் பெரியபள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா உட்பட மரைக்காயமார்களும்
கலந்து கொண்டனர்.
Post a Comment