தனது இளமைக்காலம் முதல் சமூகசேவையில்
அக்கறையுடன் செயற்பட்டு பல்வேறு சமூகம் சார்ந்த உதவிகளை மேற்கொண்டுவரும் அகில
இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின்
தலைவரும் சமூக சிந்தனையாளருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீலின் ஏற்பாட்டில் அரச வர்த்தக
கூட்டுத்தாபானத்தின் சமூக அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பார்வைக்
குறைவுள்ளவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (11) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட
செயலகத்தில் கலாநிதி ஏ.எம்.ஜெமீலின் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த இந்நிகழ்வுக்கு அகில இலங்கை
மக்கள் காங்கிரஸின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியூதீன்
பிரதம அதிதியாக கலந்துகொண்டு மூக்குக்கண்ணாடிகளை வழங்கி வைத்தார்.
மூக்குக்கண்ணாடிகள் வழங்கிவைக்கப்படும்
இன்றைய திகதிவரை 500 க்கு மேற்பட்டவர்களது கண்கள் பரிசோதிக்கப்பட்டு இன்று 220 பேருக்கு
பொறுமதி வாய்ந்த கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன. ஏனையோருக்கும் இரண்டொரு
தினங்களில் வழங்கி வைக்கப்படவுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
Post a Comment