
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று (11) பேரைவயின் தலைவர் கலாபூஷணம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் அக்கரைப்பற்று ‘ஏசியன் ஷெப்’ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுத்தீன், தேசிய காங்கிரஸ் கட்சியின்
தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, அம்பாறை
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோடீஸ்வரன், முன்னாள் அமைச்சர் பஷீர்
சேகுதாவூத், திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி அல் - ஹாபிழ். என்.எம்.ஆபத்துல்லாஹ், கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெவ்வை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எம்.நௌசாத், எஸ்.எஸ்.பி.மஜீத் (கனிய மணல் கூட்டுத்தாபனத் தலைவர்), சட்டம், ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஏ.எல்.எம். சலீம், பிரதேச
செயலாளர்கள் ஐ.எம்.ஹனீபா, வீ.ஜெகதீஸ்வரன், எஸ்.எல்.எம். ஹனீபா, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம், முன்னாள் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரும் லக்சல நிறுவனத் தலைவருமான கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில், அக்கரைப்பற்று விபுலானந்த அடிகளார் இல்லத் தலைவர் கைலாசப்பிள்ளை உட்பட், பிரதேச சபைகளின் முன்னாள் தவிசாளர், அரசியற் பிரமுகர்கள், வைத்தியர்கள், பொறியலாளர்கள், சட்டத்தரணிகள், வாங்கி மேலாளர்கள், கல்வியலாளர்கள் மற்றும் உலமாக்கள் புத்திஜீவிகள் என ஏராளமானோர்
கலந்து சிறப்பித்தனர்.
அம்பாரை மவாட்ட ஊடகவியலாளர் பேரவையின்
இந்நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக அக்கரைப்பற்று அபூபக்கர் சித்தீக் அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷேக் கலாமுல்லா (றஷாதி) அவர்கள் கலந்து கொண்டு
மார்க்க சொற்பொழிவாற்றினார்.
இதன்போது, பேரவையின் ஆலோசகராகவிருந்து
கடந்தவாரம் காலமான மூத்த ஊடகவியலாளரும், பிராந்தியத்தின் விளையாட்டு மற்றும் சாரணீயத்துறைக்கு அளப்பெரிய சேவையாற்றிய எம்.ஐ.எம். முஸ்தபா (ஓய்வு பெற்ற
விரிவுரையாளர்) அவர்களுக்கான விசேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு சகல முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கும், கிழக்கு மாகாணத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாகாணசபை உறுப்பினர்களுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment