-யு.எல்.எம். றியாஸ்-
கல்முனை பிரதேசத்தில்உள்ள உணவு கையாளும் நிலையங்கள், சிற்றுண்டிதயாரிக்கும் ஹோட்டல்கள் என்பன திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படட போது மனித பாவனைக்கு உதவாத தரமற்ற சிற்றுண்டி வகைகள், உணவுப்பொருட்கள் பெருமளவில் கைப்பற்றப்படடன.
கல்முனை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ,எல்.அலாவுதீனின் பணிப்புரைக்கமைய மாவடட மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் பி.பேரம்பலம் தலைமையிலான பொதுச் சுகாதாரபரிசோதகர்கள் குழு பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது மனித பாவனைக்கு உதவாத எண்ணெய்கள், சுகாதாரத்திற்கு பொருத்தமற்ற இடத்தில் தயாரிக்கப்பட்ட பெருமளவிலான சிற்றுண்டிவகைகள், விற்பனைக்காக பொதி செய்யப்பட்ட உணவு வகைகள் என்பன கைப்பற்றப்பட்டது.
இவ் உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்தஹோட்டல் உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்ட்டதுடன், சுகாதாரக்குறைபாடுகளுடன் இயங்கிய ஹோட்டல்களுக்கு குறிகியகால அவகாசத்துக்குள் குறைபாடுகளை நிவர்த்திசெய்யவும் கால அவகாசம்வழங்கப்பட்டது.
Post a Comment