Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

மத்தியரசு கிழக்கு மாகாணத்தை புறக்கணிக்க கூடாது -அமைச்சர் நஸீர் !

-சப்னி அஹமட்- 
கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறையை மத்தியரசு புறக்கணித்து வருகின்றதா என எம்முல் சந்தேகம் எழுகின்றதுடன் மாகாணத்தினை மத்தியரசு தொடர்ந்தும் புறக்கணித்து வருவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது, கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரம் 110 வைத்தியர்கள் அவசர தேவையுள்ளது என கிழக்கு மாகாண சுகாதர அமைச்சர் எல் முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, பெரிய கல்லாறு பிரதேச வைத்தியசாலையில் அன்மைக்காலமாக உள்ள பிரச்சினைகளையும் கேட்டறியும் விசேட கலந்துரையாடல் நேற்று (29) வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். அதன் போது உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணம் முழுவது மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் எமது சுகாதாரதுறையின் மூலம் அபிவிருத்தியையும் பல சிக்கலுகளுக்கு முடிச்சிப்போடும் வேலைத்திட்டங்களை கடந்த 02வருடங்களாக மேற்கொண்டு வருகின்றோம். விசேடமாக மூன்று மாவட்டங்களிலும் சுகாதார பிராந்திய சேவைகள் பணிமலை ஊடாக அவர்களுக்கு கீழ் உள்ள வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பல திட்டங்களை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நடைமுறைப்படுத்திவருகின்றது. அவ்வாறு நாம் நடைமுறைப்படுத்தி வருகின்றது போது சில பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை வழங்க மத்தியரசின் சில திட்டங்களால் எம்மால் இலகுவாக பிரச்சினைகள் தீர்க்கமுடியாமல் உள்ளதுடன் ஆளனிப்பிரச்சினைகள், நிதிப்பிரச்சினைகள் இவ்வருடம் பாரிய சவாலை எதிர்நோக்கக்கூடியதாகவுள்ளது. கடந்த வருடம் 690 மில்லியன் நிதி ஒதுக்கபப்ட்ட அதில் இவ்வருடம் 220 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதால் எமது மாகாணத்தில் இன்னும் அதிகமான தொடர் வேலைகளை செய்வதில் சிக்கல்கள் உள்ளது அதில் 40 மில்லியன் கடந்த வருட அபிவிருத்தி திட்டங்களுக்கும் ஒதுக்க வேண்டியுள்ளது. 

இவ்வாறன நிலையில் எமது மாகாணத்திற்கு மத்தியரசு இம்முறை சுகாதாரத்துறைக்கு ஒதுக்கிய நிதிகள் போதாமையாகவே உள்ளதுடன், ஆளனிப்பிரச்சினைகள் முழு இலங்கையிலும் காணப்படுகின்றது அதனை நிவர்த்தி செய்வதற்கு ஆளனிகள் இலங்கையில் இல்லாமல் பெரிதும் பிரச்சினைக்குறியதாகவுள்ளது அது நமது மாகாணத்திற்கும் சில பாதிப்புக்களை ஏற்படுத்துள்ளியுள்ளது ஆகவே நாம் ஆளனிகள் அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் அதில சில ஆளனிகள் கிடைக்கப்பெற்றாலும் இன்னும் அதிகம் முழு கிழக்கிற்கும் தேவையாகவே உள்ளது.  இது தொடர்பாக நாம் மத்தியரசுக்கு அறிவித்துள்ளோம் அதற்கான் நடவடிக்கைகள் மிக விரைவில் மேற்கொள்ளப்படும். வடமாகாண சபை போல் கிழக்கு மாகாண சபையில் எவ்வித முரண்பாடுகளும் இல்லாமல் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து ஒற்றுமையாக ஆட்சி செய்கின்றது. எமது மாகாணத்தில் எவ்விட முரண்பாடுகள் இல்லாமல் மேற்கொள்வதற்காக நாம் அர்ப்பணிப்புடன் மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் செயற்படுகின்றோம் இனம், பிரதேசம் வேறுபாடுகள் இல்லாமல் இரு கட்சிகளும் பிரதான பங்களிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

பெரிய கல்லாறு பிரதேசத்தின் இவ்வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலை என பெயரில் இருந்தது பிரதேச வைத்தியசாலை என அரச சுற்றுநிருபத்தின் பிரகாரம் பெயர் மாற்றம் பெற்றது தவிர இது தரம் குறைய விடவில்லை எனவும் இது தொடர்பில் மக்கள் குழம்ப தேவையில்லை எனவும், பலம்பொருந்திய இவ்வையத்தியசாலையில் 03 முக்கிய பிரிவுகளில் ஆளனிப் பற்றாற்றாக்குறையினால் மூன்று முக்கிய பிரிவுகள் மூடப்பட்டுள்ளது இதனை உடனடியாக திறப்பாற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இடமாற்றாங்களினால் சென்று இடப்பாற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறும், இங்குள்ள வெளியோயாளர் பிரிவுக்கான புதிய கட்டிடம் ஒன்றினை பெறுவதற்கான திட்டமிடல் தயாரிக்கப்பட்டுள்ளது அது மிகவிரைவில் அமுல்படுத்தப்பட்டு புத்திய கட்டிடம் ஒன்று அமைக்கப்படும் எனவும் அதற்கான நடவடிக்கை எடுப்பதற்காகவும் விரிவான ஆராய்வு எதிர்வரும் சில நாட்களுக்கு எமது திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும், இவ்வைத்தியசாலையில் மொத்தமாக 110 ஆளனிகள் இருந்தாலும் அதில் இன்னும் பலரை உள்வாங்குவதற்காக முகாமைத்துவப்பிரிவுக்கு அறிவிக்கப்பட்டு மிகவிரைவில் அதனையும் பெற்றுக்கொள்ளலாம், வைத்தியர்கள், கருவிகளை இயக்கக்கூடிய ஆளனிகள், தாதியர், குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் என்பவற்றை பெறுவது தொடர்பாகவும் வைத்தியசாலையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் ஆராய்ந்து அதற்காக உடன் தீர்வுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் இங்கு மேற்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வின் போது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா துரைரெட்ணம்,  மா. நடராஜா, கே. கருணாகரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கருனாகரன், கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் முருகானந்தன், உதவிசெயலாளர்கள், பொலிஸ் அத்தியட்சகர், வைத்தியர்கள், வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதன் போது கலந்துகொண்டனர். 

http://www.paylot.lk/http://www.paylot.lk/http://www.paylot.lk/
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget