Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

தக்வா ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடிக்கு ”செஸ்டோ” அமைப்பினால் கட்டிடமும் கூடாரமும் !

-எம்.வை.அமீர், யூ.கே.காலித்தீன்-
சாய்ந்தமருது தக்வா ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியின் நீண்ட காலத் தேவையாக இருந்த ஜனாஸா நல்லடக்க ஒழுங்குக்கான பொருட்களை வைப்பதற்குறிய கட்டத்தினை பொதுமக்களின் நன்மை கருதி, தக்வா ஜும்ஆ பள்ளிவாசலின் வேண்டுகோளை ஏற்று ”செஸ்டோ” அமைப்பின் முயற்சியால் பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு குடும்பத்தினர் வழங்கிய நன்கொடைகளைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டு  தக்வா ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாகத்திடம் இன்று காலை (29) கையளித்து வைக்கப்பட்டது.

மேற்படி அமைப்பு கல்முனை சாஹிராக் கல்லூரியில் 99 ஆம் ஆண்டு கல்வி கற்ற பழைய மாணவர்களை உள்ளடக்கிய  ”செஸ்டோ” ZESDO (Zairians’  Education & Social Development Organization) என்ற பெயரில் பிரதேசத்தின் பிரபல்யமான அமைப்பாகும்.

2017 நடப்பு ஆண்டுக்கான தலைவரும், இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியியலாளருமான எம்.ஆர்.எம். பர்ஹான் தலைமையில் இவ்வருடத்துக்கான முக்கிய வேலைத்திட்டமாக இனங்காணப்பட்டு கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு  கையளிக்கும் நிகழ்வு தக்வா ஜும் ஆ பள்ளிவாசலின் தலைவர் பொறியியலாளர் எம்.எம்.எம்.சதாத் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் "செஸ்டோ" அமைப்பின் நடப்பாண்டு தலைவர் எம்.ஆர்.எம்.பர்ஹான், செயலாளர் கமருன் ரிலா, பொருளாளர் ஏ.எச்.எம்.நளீம் , அமைப்பின் முன்னாள் தலைவர் ஆரிஸ் அக்பர், அமைப்பின் உறுப்பினர்கள், பள்ளிவாசல் உறுப்பினர்கள் உட்பட மௌலவி அல்-ஹாபில் நப்றாஸ் ஹனிபா (றஹ்மானி) துஆ பிறாத்தனையோடு நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இவ் அமைப்பானது 2013 ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு, நான்கு ஆண்டுகளைக் கடந்து, ஐந்தாவது வருடத்தில் வெற்றிகரமாக காலடியெடுத்து வைத்துள்ளது. அது மாத்திரமல்லாது கல்வி, சமூக ரீதியான பல்வேறு சேவைகளை பல்வேறு சமூக ரீதியான குறிக்கோள்களை மையமாக கொண்டு தூர நோக்கு சிந்தனையுடன், சமூகத்தின் கல்வி, கலை, கலாசார அபிவிருத்தியில் முடியுமான அளவில் பங்களிப்பு செய்து இயங்கிக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.paylot.lk/http://www.paylot.lk/ 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget