நகரத்திட்டமிடல் அமைச்சின் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதியிலிருந்தி அட்டாளைச்சேனை பிராதான வீதியில் அமைக்கப்பட்ட தெருவிளக்கு மின்கம்பங்களை ஒளிரச்செய்வதற்கான முதற்கட்ட வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வும் நேற்று (16) மாலை அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
பிரதி சுகாதார அமைச்சர் பைஷல் காசீம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் ஆகியோரினால் அப்பிரதேசத்தின் மிக குறுகிய காலத்தில் அமைக்கப்பட்ட குறித்த தெருவிளக்குகள் இயங்கச்செய்யப்பட்டதுடன், இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் 02 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் போராளிகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், பிரதியமைச்சர் பைஷால் காசீம், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல். தவம், ஆரிப் சம்சுடீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் அப்துல் மஜீத். உள்ளிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், உலமாக்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் றிஸ்வி சின்னலெப்பை, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மர்ஹூம் மசூர் சின்னலெப்பை ஆகியோருக்கான விசேட துஆப்பிராத்தனையும் இடம்பெற்றது.
குறித்த இப்தார் நிகழ்வுக்கு கலந்துகொண்ட அனைவருக்கும், ஒத்துழைத்த அனைவருக்கும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் நன்றியினை தெரிவித்தார்.
Post a Comment