முஸ்லிம் இளைஞர் சமூக ஆய்வு எனும் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடலும்
இப்தார் நிகழ்வும் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நேற்று (17) அவ் அமைப்பின் தலைவர் எம்.ஐ.முஹம்மட் இக்தார் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
பிரதித்தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவருமான கலாநிதி
ஏ.எம்.ஜெமிலின் இணைப்பாளரும், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தொடர்பாடல்
அதிகாரியுமான ஏ.எல்.ஜஹான்
கலந்துகொண்டதுடன் தொழிலதிபர் முஹர்ரம் பஸ்மிர், இளைஞர் பாராளமன்ற உறுப்பினர்களான
எப்.எம்.டில்சாத் மற்றும் இசட்.எம்.சாஜித் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும்
கலந்துகொண்டனர்.
அஷ்செய்க் எம்.எச்.எப்.றஹ்மாத்துள்லாஹ் (ஸஹ்தி) அவர்கள் மார்க்க
சொற்பொழிவாற்றினார். நிகழ்வுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது
மத்தியகுழுவின் உறுப்பினர்களும், இளைஞர்களும் வருகைதந்து
பங்குகொண்டனர்.
Post a Comment