
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் வருடாந்த இப்fதார் நிகழ்வு, மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிசாம் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இன்று (21) புதன்கிழமை இடம்பெற்றது.
இதில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் கலந்துகொண்டதுடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகமும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரீ. ஹசன் அலி உள்ளிட்டமாகாணக் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள், கல்வியலாளர்கள், உலமாக்கள், என பலரும் இவ் இஃப்த்தார் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
மூவ்வினத்தயும் பிரதிநிதித்துவப் படுத்தி பல்வேறு தரப்பினர் பங்குகொண்ட இந்நிகழ்வில் கலாநிதி எம் ஐ. முபாரக் (மதனி) அவர்கள் மார்க்க உபந்நியாசம் மேற்கொண்டார்.










Post a Comment