-யூ.கே.காலித்தீன், எம்.வை. அமீர்-
சாய்ந்தமருது தக்வா ஜும்ஆ பள்ளிவாசலினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்நிகழ்வு வருடா வருடம் நடைபெற்று வருகின்றது.
இம்முறையும் கதீப் மற்றும் முஅத்தின் மார்களுக்கான சமய, சமூக பயிற்சிப்பட்டறையும் சான்றிதழ்கள் மற்றும் உதவி வழங்கும் நிகழ்வு பள்ளிவாசலின் மண்டபத்தில் நேற்று (18) தக்வா ஜும்ஆ பள்ளிவாசலின் செயலாளர் யூ.கே.காலித்தீன் தலைமையில் இடம்பெற்றது.

இப்பள்ளிவாசலின் நிருவாகத்தினராலும், கொடையாளிகளின் பங்களிப்புக்களுடனும் நடைபெற்ற இந்நிகள்வில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் சாய்ந்தமருது கிளையின் தலைவர் அஷ்ஷேக் எம்.எம்.மீராசாஹிப் சலீம் (ஷர்கி) அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
"முன்மாதரியான இமாமும் முஅத்தினும்" எனும் தலைப்பில் அஷ்ஷேக் ஏ.எம்.றியாஸ் (பைசாலி) யும் "அதானும், சொல்லும் முறைகளும்" எனும் தலைப்பில் அஷ்ஷேக் யு.எல்.அப்துல்லாஹ் ஜமால் (ஹிழ்ரி), பேஷ் இமாம் தக்வா ஜும்ஆ பள்ளிவாசல் அவர்களும் "கண்ணியமான இமாம்களும் முஅத்தின் மார்களும்" எனும் தலைப்பில் நிந்தவூர் அர் றப்பானியா இஸ்லாமிய கற்கைகள் நிறுவகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷேக் ஏ.எம்.அப்துல் ஹமீத் (அஹ்சனி) அவர்களும் விரிவுரைகளை வழங்கிய அதேவேளை நாட்டு மக்களுக்காகவும், கொடையாளிகளுக்காகவும், குறிப்பாக உலக முஸ்லிம் உம்மத்துக்காகவும் துஆ பிராத்தனையை மாவடிப்பள்ளி குல்லியத்துல் ஷஹ்த் அரபிக் கலாசாலையின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷேக் ஏ.எஸ்.எம்.ஹபீல் அவர்கள் நிகழ்த்தினார்.
Post a Comment