-அகமட் எஸ். முகைடீன்-
கல்முனை
பிரதேச அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் கல்முனைத்
தொகுதி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்
தலைமையில் கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று (6) வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்முனை
பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மட் கனி, கல்முனை மாநகர சபை முன்னாள்
உறுப்பினரும் பிரதி அமைச்சரின் இணைப்பாளருமான சட்டத்தரணி ஏ.எம். றகீப்,
உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே. இராஜதுரை உள்ளிட்ட திணைக்களங்களின்
தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், விளையாட்டுத்துறை பிரதி
அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், பிரதேச
செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது
கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில்
மேற்கொள்ளப்படும் கிராமத்திற்கொரு அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான
முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு சுயதொழிலை ஊக்குவிக்கும்
வகையில் மேற்கொள்ளப்படுகின்ற வாழ்வாதார உதவி வழங்கும் திட்டம் தொடர்பாக
முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
அத்தோடு
எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்ட முன்மொழிவுகள்
தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அந்தவகையில் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு
வசதிகள் தொடர்பான தேவைப்பாடு குறித்து கேட்டறியப்பட்டது.
Post a Comment