கல்முனை பிராந்தியத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள் தொடர்பாகவும், அவற்றிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்புப் பெறவேண்டிய வழிமுறைகள் தொடர்பாகவும் மக்களை தெளிவுபடுத்தும் விதமாக கல்முனை பொலிஸார் இன்று (06) ஒலிபெருக்கி மூலமாகவும், துண்டுப்பிரசுரங்கள் மூலமாகவும் மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை கல்முனை பொலிஸ் பிரிவுக்குள் முன்னெடுத்தனர்.
அவர்களால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது....
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் வீடுகளில் உள்ள பணம் மற்றும் பெறுமதிவாய்ந்த நகைகள் தொடர்ந்து கள்வர்களால் களவாடப்பட்டு வருகின்றன.
எனவே இதனை கட்டுப்படுத்திவதற்கும் குறித்த கள்வர்களை கைது செய்வதற்கும் பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், பொதுமக்களாகிய நீங்கள் பின்வரும் விடயங்களை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொல்லப்படுகிண்றீர்கள்.
> தங்களது பணம் மற்றும் பெறுமதிவாய்ந்த நகைகளை பாதுகாப்பான இடங்களில் வைக்கவும்.
> பணம் நகை போன்றவற்றை அலுமாரியில் வைத்தால் அதனை இடை இடையே சரிபார்த்துக்கொள்ளவும், அலுமாரியின் திறப்பினை அலுமாரியிலேயே வைப்பதனை தவிர்த்துக் கொள்ளவும்.
> அவசரமாக வெளியில் செல்ல நேரிட்டால் பணம் மற்றும் நகைகளை தங்களது விசுவாசமான உறவினர்களிடம் கொடுத்துவிட்டுச் செல்லவும்.
> வீட்டின் முன்பக்கமாக உள்ள கதவு எவ்வளவு சக்திமிக்கதாக உள்ளதோ அதைவிட பன்மடங்கு சக்திமிக்கதாக பின்கதவை போட்டுக்கொள்ளவும்.
> வீட்டுக் கதவுகளின் திறப்புக்களை கதவுகளில் வைப்பதை தவிர்த்துக்கொள்ளவும்.
> வீட்டிலுள்ள அனைவரும் வெளியில் செல்ல நேர்ந்தால் தங்களது பணம் மற்றும் பெறுமதிவாய்ந்த நகைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்து நன்கு பூட்டிவிட்டு அனைத்து திறப்புகளையும் தங்களுடனேயே கொண்டுசெல்லவும்.
> வீட்டு கதவுகளின் மற்றும் அலுமாரிகளின் பூட்டுக்கள் சக்திமிக்கதா? என இடை இடையே பரிசீலித்துக் கொள்ளவும்.
> தங்களின் வீடுகளுக்கு புதிதாக மற்றும் இடை இடையே வருபவர்கள் சம்பந்தமாக அவதானமாக செயற்படவும். தங்களின் வீடுகளுக்குள் நுழைவதற்கு கதவு தவிர்ந்த வேறு ஏதும் வழிகள் இருந்தால் அதனை உடனடியாக அடைத்து விடவும். அல்லது அது சம்பந்தமாக அவதானமாக இருக்கவும்.
> பெண்கள் தனியாக வீட்டில் சமையல் வேலைகளிலோ, அல்லது வேறு வேலைகளிலோ ஈடுபடும்போது வீட்டின் உன்கதவு, மற்றும் வாசலின் பிரதான கதவு போன்றவற்றை நன்றாகப் பூட்டிவிடவும்.
> தங்களது பணம் மற்றும் பெறுமதிவாய்ந்த நகை போன்றவற்றை பாதுகாப்பதற்கு பொருத்தமான இடம் அலுமாரி மாத்திரம்தான் என்பதை தங்களது மனதில் இருந்து அகற்றிக்கொள்ளவும்.
> தங்களது பணம் மற்றும் பெறுமதிவாய்ந்த நகைகளை இயன்றளவு வங்கிகளில் வைப்பில் இட்டு கொள்வதுடன் அவசரமாக பணம் பெறுவதற்கு ATM அட்டைகளை பயன்படுத்திக்கொள்ளவும்.
> இரவு வேளைகளில் தங்களது வீடுகளில், வியாபாரஸ்தலங்களில் தேவையான இடங்களில் மின்குமிழ்களை ஒளிரவிடவும். வசதிபடைத்தவர்கள் தங்களது வீடுகளில் CCTV கமராக்களை பொருத்திக்கொள்ளவ்வும்.
மேலும், இவ்வாறான களவுகளில் ஈடுபடுபவர்கள் சம்பந்தமான தகவல்களோ அல்லது சந்தேகத்துக்கிடமான நபர்களின் நடமாட்டங்களோ கண்டறியப்பட்டால் உடன் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தரவும்.
பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி -0718138266
சிறுகுற்றப்பிரிவுப் பொறுப்பதிகாரி - 0776679683
சமூகப் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி - 0711357741
நிருவாக்கப் பொறுப்பதிகாரி - 0718080771
நிலைய பொறுப்பதிகாரி - 0672229226, 0718591161
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், கல்முனை - 0672229227, 0718591164
நிலைய பொறுப்பதிகாரி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்
பொலிஸ் நிலையம் பொலிஸ் அலுவலகம்
கல்முனை கல்முனை

Post a Comment