ஒரே தேசிய பாடசாலையில் 10 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக
கடமையாற்றும் உயர்தரப் பிரிவில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வேறு பாடசாலைகளுக்கு
இடமாற்றுவதற்கான நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சின் சிரேஸ்ட
அதிகாரியொருவர் தெரிவித்தார்.
நாடு தளுவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் உயர்தரப் பிரிவில்
கற்பிக்கும் 2800 ஆசிரயர்களின் பெயர் விபரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இடமாற்றத்தற்கு
எந்தவிதமான தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாதவாறு
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உயர் அதிகாரி தெரிவித்தார்.
இந்த இடமாற்றம் கல்வியமைச்சின் கீழுள்ள ஆசிரியர் இடமாற்ற
சபையினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Post a Comment