5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சாய்ந்தமருது
அல் ஹிலால் வித்தியாலய மாணவர்களை வரவேற்று பாராட்டி பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இன்று
பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.பைஸால் தலைமையில் இடம்பெற்ற
மேற்படி நிகழ்வில் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகவும்
கல்முனை வலய பிரதி கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல்
தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா முன்னாள் பாடசாலை
அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் பாடசாலை ஆசிரியர்கள்
உள்ளிட்ட கல்வியாளர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் வர்த்தக பிரமுகர்கள் நலன்விரும்பிகள்
என பலரும் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்டத்தில் 191 புள்ளிகளைப் பெற்ற முதனிலை மாணவி
எம்.ஜே.அமாரா ஸஹ்லா விசேடமாக பாராட்டப்பட்டதுடன் விசேட பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.






Post a Comment