Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

வனரோபா ” தேசிய மரநடுகை நிகழ்வு நாளை ( 11 ) கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில்

நாட்டின் வனவளத்தை அதிகரிக்கும் வகையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள       ” வனரோபா ” தேசிய மரநடுகை நிகழ்வு நாளை ( 11 )  கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
கல்லூரி அதிபர் எம்.எஸ்.முஹம்மட் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள்  சுற்றாடல் முன்னோடி கழக மாணவர்கள் வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பிப்பதுடன் கல்லூரி வளாகத்தினுள் மரக்கன்றுகள் நடும் உத்தியோகபுர்வ நிகழ்வுகளும் இடம்டிபறவுள்ளன.

வன ரோபா திட்டத்தின் அடிப்படையில் இலங்கையில் 2015 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு  வருடமும் ஒக்டோபர் மாத்த்தினை தேசிய மரம் நடும் தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இதனடிப்படையில் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் 2018 ஆம் ஆண்டளவில் 700,000 மரங்களை நடுவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் சாய்ந்தமருது கோட்ட சுற்றாடல் ஆணையாளர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் தெரிவித்தார்.
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget