கடந்த சிறுபோகத்தின்
போது விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வரட்சியியனால் பாதிக்கப்பட்டு நஸ்டப்பட்ட விவசாயிகளுக்கு சிறு போக விவசாய நடவடிக்கைகளுக்காக
கடனடிப்படையில் விதை நெல் மற்றும் சோள விதைகளை வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதியும்
அரசாங்கமும் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தற்போதய நிலமையினை அறிந்து அவர்களுக்கு உதவிக் கரம்
நீட்டும் வகையில் வழங்கப்படவுள்ள கடனடிப்படையிலான விதைகளுக்கு 50 வீதம் மானியமும் வழங்கப்படவுள்ளதாக
விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
வடக்கு கிழக்கு
உட்பட நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ள விவசாய அமைப்புகள் வரட்சியினால் பாதிக்கப்பட்ட
விவசாயிகள் சம்பந்தமாகவும் அவர்களுக்கு உதவி வழங்கும் அடிப்படையிலும் வழங்கிய முறைப்பாடுகளை
கவனத்திற்கு எடுத்த பின்னரே மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Post a Comment