அண்மையில்
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்
அடிப்படையில் நாடு தளுவிய ரீதியில் 33, 163 மாணவர்கள் உபகார நிதியினை பெறுவதற்கும்
வேறு தெரிவு செய்யும் பாடசாலைகளில் இணைந்து
கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
கடந்த வருடம்
ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாட்டிலுள்ள 3014 பரீட்சை
நிலையங்களில் நடைபெற்றது. இந்த பரீட்சைக்கு
3 56 728 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களுள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று இந்த பரீட்சையில் 2, 43, 236 மாணவர்கள் சித்தியடைந்த
போதிலும் 33 ,163 மாணவர்கள் மட்டுமே புலமைப்பரிசில் பெறுவதற்கு தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சித்தியடைந்த மாணவர்களின் விகிதாசாரம் 69.4 ஆகும்.
இலங்கையிலுள்ள
மாகாணங்களின் அடிப்படையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் அடிப்படையில் தென்
மாகாணம் முதலாவது இடத்தையும் வடமேல் மாகாணம் இரண்டாவது இடத்தையும் சப்ரகமுவ மாகாணம்
மூன்றாவது இடத்தையும் வெட்டுப்புள்ளிக்கு மேல்
சித்திபெற்ற மாணவர்களின் அடிப்படையில் வடமேல்
மாகாணம் முதலாவது இடத்தையும் வட மாகாணம் இரண்டாவது இடத்தையும் சப்ரகமுவ மாகாணம் மூன்றாம்
இடத்தையும் பெற்றுள்ளன.
இலங்கையிலுள்ள
99 கல்வி வலயங்களினுள்ளும் 70 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களின் அடிப்படையில்
நிகவரெட்டிய கல்வி வலயம் முன்னிலையிலும் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் மாணவர்கள் பெற்ற
புள்ளிகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் கல்வி
வலயம் முன்னிலையிலும் உள்ளன.
பரீட்சை முடிவுகளின்
விகிதாசார அடிப்படையில் அம்பன்பொல நிக்கவரெட்டிய
ஹென்றி ஓல்கட் கனிஸ்ட வித்தியாலயம் தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளதாக கல்வியமைச்சு
அறிவித்துள்ளது.
Post a Comment