பொத்துவில்
பிரதேசத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் ஆசிரியர் இடமாற்றத்தை கண்டித்தும் தனிவலய கோரிக்கையை முன்னிறுத்தியதுமான கண்டனப் பேரணி புதன்கிழமை பொத்துவில்
பொதுமக்களால் நடாத்தப்பட்டது.
பொத்துவிலில்
மொத்தமாக 21 பாடசாலைகளில் 480 ஆசிரியர் வளம் தேவையான நிலையில் 175 ஆசிரியர்கள் பற்றாக்குறையோடு பொத்துவில் பிராந்திய பாடசாலைகள் இயங்கி வருகின்றன. ஏற்கனவே 175 ஆசிரியர்கள் பற்றாக்குறையோடு இருக்கையில் இருக்கின்ற அற்பசொற்ப
ஆசிரியர்களில் 39 பேரை இரவோடிரவாக அதிகார மேலாதிக்கத்தை பயன்படுத்தி வெளியூர்களுக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.
பொத்துவில்
தனி வலய கோரிக்கையை அதிகாரிகளும் அரசியலாளர்களும் கண்ணெடுத்தும் பாராது மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர்.
இவையெல்லாவற்றையும்
கண்டித்து ஏற்பாடு செய்த குறித்த பேரணி பொத்துவில் பெரிய ஜூம்ஆ பள்ளியிருந்து ஆரம்பமாகி பிரதான
வீதியூடாக பொத்துவில் பிரதேச செயலகம் வரை சென்று பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளித்து பேரணி நிறைவுற்றது.
இப்பிரச்சினைக்கு
நிரந்தர தீர்வு கிடைக்காவிடின் உண்ணாவிரதம் இருந்து போராடவும் தயங்கப் போவதில்லை என்று கலந்து கொண்ட பெற்றோர்கள் காட்டமாக தெரிவித்தனர்.
Post a Comment