நாட்டிலுள்ள
பாடசாலை மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒக்டோபர் மாதம் 22 முதல்
28 வரை தேசிய வாசிப்பு மாதம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
தேசிய
வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிக்குடியில்
இன்று ஒழுங்கு செய்திருந்த
விழிப்புணர்வு ஊர்வலத்தில் பாடசாலை மாணவர்கள் அதிபர் பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் நூலக சேவையாளர்கள் என
பலரும் கலந்து கொண்டனர்.
வாசிப்பு
மாத கொடி தினத்தையொட்டிய முதல் கொடியினை மாணவர்கள் அதிபர் கே.தம்பிராஜாவிற்கு வழங்கி வைத்தததுடன் இந்நிகழ்வில் பிரதி
அதிபர்களான என்.நாகேந்திரன் எம்.சுவேந்திரராஜா ரீ.ஜனேந்திரராஜா நூலக
சேவையாளர்களான கே.பார்த்தீபன்
வை.தினேஸ்குமார் அ.உசானந் ஆகியோர்
கலந்து கொண்டதுடன் ஆசிரியர்கள்
கல்விசாரா உத்தியோஸ்தர்கள் மற்றும் மாணவர்களுக்கு
கொடிகள் வழங்கப்பட்டன.
Post a Comment