புதிதாக
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
தேர்தல் முறைகள் தொடர்பாகவும் புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பாகவும் விளக்கமளிக்கும் செயலமர்வு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (05) தாருஸ்ஸலாமில் நடைபெற்றது.
புதிய
உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாணசபை தேர்தல் முறைகள் தொடர்பாக மூலதன Human Capital
Research தலைவி டொக்டர் சுஜாதா கமகே விளக்கமளித்தார். அரசியலமைப்பு சபை வழிநடத்தல் குழு உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான டொக்டர் ஜயம்பதி விக்ரமரத்ன இடைக்கால அறிக்கையும் சிறுபான்மையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இந்நிகழ்வில்
தமிழர் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் சிறப்புரையாற்றினார். நிகழ்வுக்கு வருகைதந்தவர்களின் கேள்விகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிஸாம் காரியப்பர் பதிலளித்தார். இதுதவிர அந்தந்த விரிவுகளின்போதும் கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதில்கள் வழங்கப்பட்டன.
இச்செயலமர்வில்
கட்சியின் அரசியல் பிரதிநிதிகள், உயர்பீட உறுப்பினர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலார்கள், இளைஞர்கள் மற்றும் புத்துஜீவிகள் என 200க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.






Post a Comment