அம்பாறை
மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் மாதாந்த ஒன்றுகூடல் இறக்காமம் அமீர்அலிபுரம் மௌலானா மத்திய நிலையத்தில் நேற்று ( 29 ) இடம்பெற்றது.
போரத்தின்
தலைவர் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில்
இடம்பெற்ற மேற்படி மாதாந்த அமர்வில் பொருளாளர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் உதவி
செயலாளர் வீ.சுகீதகுமார் உள்ளிட்ட
ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்விற்கு
பிரதம அதிதியாக இறக்காமம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு இணைத்தலைவர் பொறியியலாளர்
எம்.எல்.மன்சூர் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் தங்களால் இயன்றவரை இறக்காமத்தில் நிலவும்
பல பிரச்சனைகளை வெளிக் கொண்டுவந்து அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும்
வண்ணம் முன்னிலைப்படுத்தி இப்பிரதேசத்தை அம்பாறை மாவட்டத்தின் ஏனைய பகுதிகள் போன்று
சகல துறைகளிலும் பிரகாசிக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொணடார்.
Post a Comment