சாய்ந்தமருது,
மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசல், உலமா சபை மற்றும் பொது அமைப்புகளின் ஒன்றியமும் ஒன்றிணைந்து ஒழுங்கு செய்திருந்த தொடர் கடையடைப்பினால் சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்கள் இன்று முடங்கி
காணப்படுகின்றன.
சாய்ந்தமருது
மக்களின் நீண்டகால தேவையான தனியான உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையானது, அனைத்துக் கட்சிகளின் தலைமைகளாலும் அங்கீகரிக்கப்பட்டு ஏமாற்றப்பட்ட நிலையில், அதனை வெற்றிகொள்ளுமுகமாக அரசுக்கு அழுத்தத்தை பிரயோகிக்கும் வண்ணமே இந்த தொடர் கயைடைப்பு ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.
சாய்ந்தமருது
– மாளிகைக்காடு பிரசேங்களிலுள்ள வீதிகளில் கறுப்பு கொடிகள் பதாதைகள் தொங்கவிடபபட்டுள்ளதுடன் பொதுச்சந்தை,
வர்த்தக நிலையங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை தராத நிலையுிலும், வங்கிகள் அரச நிறுவனங்கள் என்பன உத்தியோகப்பற்றற்ற முறையில் மூடிய நிலையிலும் உள்ளூர் வீதிகள் வெறிச்சோடிய சூழலும் காணப்பட்டது.
பிரதான வீதியில்
போக்குவரத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வண்ணம் கல்முனை பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை எந்தவிதமான
அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லையென கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்..
Post a Comment