வியாபாரரத்திற்கென
சுமார் நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுக்களை மோட்டார் சைக்கிகளில் எடுத்துச்சென்ற நபர் ஒருவர் ஏறாவூர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஏறாவூர்ப்
பிரதேசத்திற்கு காத்தான்குடியிலிருந்து
இந்த சிகரட்டுக்கள்
எடுத்துச்செல்லப்பட்டவேளை
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றையடுத்து திடீரென மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட
போதே பொலிஸார் இந்த
சட்ட விரோத சிகரட்டுக்களை கைப்பற்றியதாக
ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சிந்தக்க பீரிஸ்
தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட
சந்தேகநபர்
ஏறாவுர்
நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டார்.


Post a Comment