காபட்
வீதியாக புனரமைக்கப்பட்ட சம்மாந்துறை அலவக்கரை வீதி கடந்த வெள்ளிக்கிழமை (13) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
ஐக்கிய
தேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலி
தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில்
முன்னாள் அமைச்சர் பீ.தயாரத்ன, பொத்துவில்
தொகுதி ஐ.தே.கட்சி
அமைப்பாளர் யூ.கே.ஆதம்லெப்பை,
கல்முனைத்தொகுதி ஐக்கிய தேசியக்கட்சி
அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றஸாக் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின்
பிரதம பணிப்பாளர் பொறியலாளர் ஏ.எல்.எம்.நிஸார் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அமைப்பாளர்
ஹசன் அலியின் கோரிக்கைக்கமைய குறித்த வீதியினை நிர்மாணிப்பதற்காக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல 25மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment