இலங்கையின் எதிர்கால மாற்றத்திற்கான அமைப்பின் நவம்பா்
மாதத்திற்கான ஒன்று கூடலும்,
சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள சமூக சேவை
உத்தியோஸ்தரை கௌரவிக்கும் நிகழ்வும் சாய்ந்தமருது தேசிய இளைஞா் சேவை மன்றத்தில்
கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையின் எதிர்கால மாற்றத்திற்கான அமைப்பின் தலைவா் முபாறக் பின் முஹம்மட்
முஸ்தபா தலைமையில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக அம்பாறை மாவட்ட
இளைஞா் பாராளுமன்ற உறுப்பினா் இஸட்.எம்.ஸாஜித்
மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள சமூக
சேவை உத்தியோகத்தா் ஏ.அஹமட் சபீர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் அமைப்பின்
அங்கத்தவர்களும் பிரசன்னமாயிருந்தனர்.




Post a Comment