சாய்ந்தமருது
உள்ளுராட்சி மன்ற போராட்டமானது கல்முனைக்குடி மக்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. எங்களுக்கு
ஆசை காட்டி மோசம் செய்து கடைசியில் காலைவாரிவிட்ட அரசியல்வாதிகளின் நாடகமே.
சாய்ந்தமருது
மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு ஒதுக்கீடு செய்திருந்த 1500000.00 ரூபாய்
நிதியினை உள்ளுராட்சிசபை கிடைக்கும் வரைக்கும்
ஏற்பதில்லை
இவ்வாறு வௌ்ளிக்கிழமை(
3 ) சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் ஜும்ஆத்
தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்ற மக்கள் பணிமனை திறப்பு விழாவில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு
ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா தெரிவித்தார்.
எதிர்வரும்
காலங்களில் எந்தவொரு அரசியல் கட்சியின் செயற்பாடுகளையும் சாய்ந்தமருது பிரதேசத்தில்
தவிர்த்துக் கொள்வதுடன் அரசியல் வாதிகளினால் ஒதுக்கப்படும் எந்தவொரு நிதியினையும் சாய்ந்தமருது
பிரதேச செயலகப்பிரிவில் செலவிடுவதில்லை என்பதோடு எதிர்காலத்தில் சகலவிதமான அரசியல்
செயற்பாடுகளையும் பள்ளிவாசல் நிர்வாகத்துடன் இணைந்து செயற்படும்படியாக மக்கள் தொடர்நதும்
தமது பணிகளை தொடர்வதற்காகவே இந்த மக்கள் பணிமனை திறந்து வைக்கப்படுவதாக பள்ளிவாசல்
தலைவர் வை.எம்.ஹனீபா தெரிவித்தார்.
சாய்ந்தமருதிற்கான
தனியான பிரதேச சபை போராட்டமானது எமது சகோதரர்களான கல்முனைக்குடி மக்களுக்கு எந்தவித்திலும்
எதிரானது அல்ல சாய்ந்தமருது மக்களிடையே ஓடும் இரத்தம் தான் கல்முனைக்குடி மக்களிடையேயும்
ஓடுகின்றது. கல்முனைக்குடி மக்கள் இல்லாமல் சாய்ந்தமருது மக்களின் செயற்பாடுகளையோ அதே
போன்று சாய்ந்தமருது மக்கள் இல்லாமல் கல்முனைக்குடி மக்களின் செயற்பாடுகளையோ முன்னெடுத்துச்
செல்ல முடியாது. இரு ஊர்களும் பிட்டும் தேங்காய்ப் புவும் போன்று மிகவும் இறுக்கமானது.
ஆனால் இந்த உறவில் விரிசலை ஏற்படுத்தி அதில் அரசியல் நடத்த அரசியல்வாதிகள் திட்டிய
திட்டமும் தொடர்ச்சியாக சாய்ந்தமரது மக்களைப் பயித்தியகாரர்களாக கொழும்பிற்கு அலையவிட்டு
இறுதியில் கையை விரித்துவிட்ட அரசியல்வாதிகளின் உள்நோக்கமுமே இந்த இரு ஊர் மக்களையும்
பிரித்துப்பார்க்கதூண்டியுள்ளது..
ஆரம்பத்திலேயே
சாய்ந்தமருதிற்கென தனியான பிரதேச சபை வழங்க முடியாது அதில் பல பிரச்சினைகள் உண்டு இந்த
முயற்சியை கைவிடுங்கள் என்று அன்று தொட்டு இன்று வரை ஏமாற்றிய அரசியல் வாதிகள் கூறி
இருந்தால் இந்த நிலமை இவ்வளவு தூரத்திற்கு சென்றிருக்க மாட்டாது .
சாய்ந்தமருதுக்கு
தனியான உள்ளுராட்சிசபையை வழங்குவதற்கு தடையாக சில அரசியல் வாதிகள் இருப்பதாகவும் மக்கள் நலன் சார்ந்த குறித்த கோரிக்கைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸும் ஒருவர் என்று கூறி ஆவர் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு ஒதுக்கீடு செய்திருந்த 1500000.00 ரூபாய்களையும் உள்ளுராட்சிசபை கிடைக்கும் வரைக்கும் ஏற்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது
மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா
தெரிவித்தார்.
உள்ளுராட்சிசபை
விடயத்தில் அமைச்சர்களான ஹக்கீம்,றிஷாட் மற்றும் பிரதி அமைச்சர் ஹரீஸ் போன்றோரால் சாய்ந்தமருது மிகுந்த ஏமாற்றத்தை அடைந்துள்ளதாகவும் இந்த மக்களின் நியாயமான கோரிக்கையை சிலர் வெறுகண்கொண்டு பார்ப்பதாகவும் சாய்ந்தமருது மற்றும் கல்முனை மக்கள் உறவுகளால் ஒன்றினைந்தவர்கள் என்றும் இந்த உறவுகளை யாரும் பிரித்து விட முடியாது என்றும் சாய்ந்தமருது மக்கள் நிருவாக பிரிப்பு ஒன்றை நட்டுமே கோருவதாகவும் அதனூடாக கல்முனை மாற்றுச் சமூகத்தின் கைக்கு சென்றுவிடும் என்று போலியான பிரச்சாரம் செய்வதாகவும் இவ்வாறானதொரு நிலை இல்லை என்றும் தெரிவித்தார்.
Post a Comment