வேள்வி எனப்படும்
சமய சமூக கலாசார பொருளாதார பண்பாட்டு அபிவிருத்தி மன்றம் ஒழுங்கு செய்திருந்த எதிர்வரும்
தேர்தல்களில் பெண்கள் போட்டியிடுவது சம்பந்தமான ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும்
நிகழ்வொன்று மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் ஹோட்டலில்
இன்று இடம்பெற்றது.
வேள்வி பெண்கள்
அமைப்பின் தலைவியும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான அனுசியா சேனாதிராஜா
தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வேள்வி அமைப்பின் ஆலோசகர் பீ.சிறிகாந் இலங்கை மொழிபெயர்ப்பாளர் சேவையைச் சேரந்த ஏ.ஆர்.எம்.சுபைர்
மீசான் பெண்கள் அமைப்பின் தலைவி எம்.றிலிபா பேகம்
அம்பாறை பெண்கள் அமைப்பின் தலைவி எஸ்.ஏ.பிரேமாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில்
வேள்வி பெண்கள் அமைப்பின் தலைவியும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான
அனுசியா சேனாதிராஜா கருத்து தெரிவிக்கையில்
தொடர்ச்சியாக
இந்த வேள்வி அமைப்பின் ஆரம்பகால செயற்பாடுகள் அதிகளவு பெண்களை உள்வாங்கி அவர்களுடைய
வாழ்வாதார செயற்பாடுகள் மூலம் அவர்களை நிலை நிறுத்தி அவர்களது வாழ்வை மேலும் மேப்படுத்துவதனையே நோக்கமாக கொண்டு செயற்பட்டு வந்தது. அத்துடன் பிராந்திய த்தில் சமத்துவத்தையும் சமாதானத்தையும் பல்லின மக்களுடன் இணைந்து அவர்கள் மத்தியில்
புத்துணர்வை ஏற்படுத்துவதில் முன்னின்று செயற்பட்டும் வந்துள்ளது.
இந்த
செயற்பாட்டின் அடுத்த கட்டமாக எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற மாகாண சபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் வேள்வி அமைப்பைச் சேர்ந்த பெண்கள் இந்த தக்க சந்தர்ப்பததை நன்கு பயன்படுத்தி அரசியலில் குதித்து தமக்குரிய 25 வீத இட ஒதுக்கீட்டைப் பெற்றுக்
கொள்ளும் ஒரு கடப்பாட்டுக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே எந்தவொரு அரசியல் கட்சியுடன் இணையாமல் தனித்துவமாக தேர்தலில் குதிப்பதன் மூலம் பெண்களின் பங்கை பெற்றுக் கொள்வதுடன் பெண்கள் சமூகத்தின் மத்தியில் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியாகவும்
தீர்வினை பெற்றுக் கொள்ளவும் முடியும்.
பெண்கள்
அரசியலில் ஈடுபடுவது தற்காலத் தேவையாக இருப்பதுடன் பெண்கள் அரசியல் சக்தியாக மாறி எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் போட்டியிடுவதற்காக தமிழ் சிங்கள முஸ்லீம் கிருஸ்தவ இனத்தைச் சேர்ந்த சமூகப் பிரச்சினைகளை நன்கறிந்த 37 பெண்களை வேள்வி அமைப்பு தற்போது பல்வேறு பிராந்திய மட்டத்திலும் தேர்தலில் போட்டியிடுவதற்காக பயிற்றுவித்து வருகின்றது. இந்த பெண்களிடம் சேவை மனப்பாங்கு அதிகமாக காணப்படுகின்றது சுயநலத்தை மறந்து பொதுநலனுக்காக பாடுவதற்கு திடசங்கர்ப்பம் புண்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் அரசியலில் ஈடுபட்டு சமூகத்திற்காக சேவையாற்ற தயாராகவுள்ளனர். என்று குறிப்பிட்டார்.




Post a Comment