எதிர்வரும் பெப்ரவரி
10 ஆம் திகதி நடைபெறவுள்ள கல்முனை மாநகரசபைக்கான உள்ளுராட்சிமன்ற தேர்தலில் சாய்ந்தமருது
மக்கள் பணிமனை சார்பாக சுயேற்சைக்குழுவில் தோடம்பழச் சின்னத்தில் 22 ஆம் வட்டாரத்தில்
போட்டியிடும் நில அளவையாளர் எம்.ஏ.றபீக் தலைமையில் சாய்ந்தமருது அல் ஹிலால் வீதியில்
தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
மாளிகைக்காடு –
சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா
பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
சாய்ந்தமருது
22 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அதிக அளவிலான ஆதரவாளர்களும் ஊர் பிரமுகர்களும் உலமாக்களும்
இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.








Post a Comment