Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக்கழகம் 6 விக்கட்டுக்களனால் வெற்றி

 ( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்திற்கும் மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக் கழகத்திற்கும் இடையில் மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ( 14 )  இடம்பெற்ற 45 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடினபந்து கிறிக்கட் போட்டியில் சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக்கழகம் 6  விக்கட்டுக்களனால் வெற்றிபெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 38.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தினர் 22.1 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கட்டுக்களினால் வெற்றி இலக்கை அடைந்தனர்.
மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக் கழகத்தின் சார்பில் தினேஸ் 25 ஓட்டங்களையும் அனுரன் 19 ஓட்டங்களையும் பெற்றனர்.

சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தின் சார்பில் அப்லால் 9 ஓவர்கள் பந்து வீசி ஒரு ஓட்டமற்ற ஓவர் உள்ளடங்கலாக 24 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார். இஸ்கி 39 ஓட்டங்களையும் இம்திகாப் 26 ஓட்டங்களையும் அக்மல் சிபாக் 23 ஓட்டங்களையும் அப்லால் 12 ஓட்டங்களையும் பெற்று கழகத்தழன் வெற்றிக்கு மேலும் வலுச்சேர்த்தனர்.
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget