மாளிகைக்காடு அல்
ஹுஸைன் வித்தியாலய வெள்ளி விழா ஆரம்ப நிகழ்வும் முதலாம் தர மாணவர்களை வரவேற்கும் ”
வித்தியாரம்ப” விழாவும் இன்று நடைபெற்றது.
பாடசாலை அதிபர்
அல்ஹாஜ் ஏ.எல்.எம்.ஏ.நழீர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் இப்பாடசாலையின் ஸ்தாபக
அதிபர் ஓய்வுபெற்ற அல்ஹாஜ் ஏ.எம்.இப்றாஹிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
முதலாம் தரத்தில் இவ்வருடம் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் மாலை
அணிவிக்கப்பட்டு பிரதம அதிதியினால் அகரம் சொல்லி கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன்
பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு
25 வருடங்கள் புர்த்தியடைவதனை முன்னிட்டு வெள்ளிவிழா நிகழ்வுகள் பிரதம அதிதியினால்
ஆரம்பித்தும் வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபரின் சேவையினை பாராட்டி அல்ஹாஜ்
ஏ.எல்.எம்.ஏ.நழீர் அவர்கள் பாடசாலை
சமூகத்தினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.










Post a Comment