Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கும் கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கும் புறப்படும் உதயதேவி புகையிரம் ஒருவாரகாலமாக சேவையில் இல்லை.

 ( எம்.ஏ.அஹ்ஸன் அக்தர்)
மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து காலை 6.10 இற்கு கொழும்பு கோட்டை நோக்கி புறப்படும் உதயதேவி புகையிரதம் கடந்த ஒரு வார காலமாக சேவையில் ஈடுபடாமையினால் பகலில் பயணம் செய்யும் பிரயாணிகள் பலத்த அசௌகரியத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதேவேளை கொழும்பு கோட்டையிலிருந்து காலை 6.10 இற்கு மட்டக்களப்பு நோக்கி புறப்படும் உதய தேவி புகையிரதமும் தனது சேவையினை நிறுத்தியுள்ளமை மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பிரயாணிகள் மேலும் தெரிவித்தனர்.

இந்த இரண்டு புகையிரத சேவைகளும் நிதந்தரமாகவே நிறுத்தப்பட்டு விடுமோ என்ற பீதி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்களிடையே தற்போது தோன்ற ஆரம்பித்துள்ளதுடன் இவ்விடயம் பற்றி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எந்தவொரு அரசியல் வாதிகளோ அரசியல் தலைமைகளோ முயற்சி எடுக்காமை மிகவும் மன வேதனையளிப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget