Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டிய நிகழ்வுகள் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.

( எம்.ஐ.எம்.அஸ்ஹர் யு.கே.காலித்தீன் எம்.வை.அமீர் எம்.எம்.ஜபீர் )

சுதந்திரதினத்தையொட்டி வெளியிடப்பட்டுள்ள 1000 ரூபாவில் சாய்ந்தமருதுமாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின்  படத்தினை பிரசுரித்து சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேச மக்களை நல்லாட்சி அரசு கௌரவித்துள்ளது.

இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டிய நிகழ்வுகள் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் வெகு விமரிசையாக இன்று இடம்பெற்றது.
சாய்ந்தமருது -மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் நாட்டிலுள்ள அனைத்து மக்களின் நல்வாழ்வுக்காகவும் நாட்டில் வளமான சுபீட்சம் அமைதியான சுதந்திரமான ஒற்றுமையான சூழல் ஏற்படவும்  விசேட துவாப் பிரார்த்தனை இடம்பெற்றது.
மாளிகைக்காடு பிரதான வீதியிலுள்ள பள்ளிவாசலில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் பொல்லடி பாவா பைத் பாடசாலை மாணவர்களின் பங்களிப்புகளுடன் சாய்ந்தமருது ஜுஆப் பெரிய பள்ளிவாசல் வரை இடம்பெற்றது
சுதந்திர தினத்தையொட்டி வெளியிடப்பட்டுள்ள 1000 ரூபாய் தாளில் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலின் படத்தினை பிரசுரித்து சாய்ந்தமருது பிரதேச மக்களுக்கு கௌரவத்தினையும் மதிப்பையும் வழங்கியுள்ள இலங்கை ஜனநாயக குடியரசின் மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் நல்லாட்சி அரசுக்குக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பள்ளிவாசல் வளாகத்தினுள் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன் சாய்ந்தமருதுமாளிகைக்காடு பிரதேசம் எங்கும் சுதந்திர தினத்திற்கு வாழ்த்துத் தெரிவிக்கும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளதுடன் பிரதான வீதி உள்ளுர் வீதி வர்த்தக நிலையங்கள் அரச நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் வங்கிகள் பாடசாலைகள் வீடுகள் வாகனங்கள் போன்றவற்றில் பெரும் தொகையில் தேசியக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.

இளைஞர்கள் தேசியக் கொடிகளை ஏந்திய வண்ணம் சாய்நதமருது பிரதான வீதி வழியாகவும் உள்ளுர் வீதி வழியாகவும் மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டிகள் மூலமாக ஊர்வலமாக சென்றனர்.
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget