( எம்.ஐ.எம்.அஸ்ஹர்
யு.கே.காலித்தீன் எம்.எம்.ஜபீர் எம்.எம்.சஹாப்தீன்கல்முனை மாநகர
சபைத் தேர்தலில் 12 ஆசனங்களைப் பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு
வெற்றிபெற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் சாய்ந்தமருது – மாளிகைக்காடு
மக்கள் பணிமனை சார்பில் தனியான உள்ளுராட்சிமன்ற இலக்கை நோக்கிய பயணத்தில் தோடம்பழச்
சின்னத்தில் சுயேட்சைக்குழுவில் போட்டியிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள்
6 பேரையும் படுதோல்வியடையச் செய்து வரலாற்று சாதனை படைத்த சாய்ந்தமருதின் 6 வெற்றி
வேங்கைகளையும் தங்களுடன் வந்து இணையுமாறு நேற்று ஊடகங்கள் மூலம் அழைப்பு விடுத்த ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான றவுப் ஹக்கீமின் அழைப்பை இன்று சாய்ந்தமருது
– மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில்
சுயேட்சைக்குழுவின் சார்பில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் உலமாக்கள் ஊர்பெரியார்கள் போராளிகள்
மத்தியில் சுயேட்சைக்குழுத் தலைவர் எம்.எச்.எம்.நௌபர் மற்றும் சாய்ந்தமருது
– மாளிகைக்காடு ஜும்ஆப்
பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா ஆகியோர் தெரிவித்தனர்.
நவம்பர் புரட்சியின் போது இந்த பள்ளிவாசலுக்கு முன்பாக இவ்வுர் தியாகிகள் உணவன்றி
குடிக்க தண்ணீரின்றி வெயில் மழை பனி பாராது போராடிய இப்போராட்டத்தினை ஏடெடுத்தும் பார்க்காமல் எள்ளிநகையாடிய ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இப்போது தமது மானம் கல்முனை மாநகரசபையில் மட்டுமல்ல முழு
தேசத்திலும் சர்தேசத்திலும் காறித்துப்பும் அளவுக்கு வந்த பின்பு சாய்ந்தமருது மக்களிடம்
காலில் விழுந்து மேயர்பதவியை பிச்சையாகத் தருகின்றோம் வாருங்கள்
என்று முதலைக் கண்ணீர் விடுவது எவ்வளவு கேவலமான விடமாகும்.
தேர்தல் காலங்களில் போகுமிடமெல்லாம் சாய்ந்தமருது மக்களை திட்டி தீர்த்தது மட்டுமல்ல
ஊருக்கு ஊர் பொய் வாக்குறுதிகளை வழங்கி இன்று ஆப்பிழுத்த குரங்காட்டம் ஆகியிருப்பது
இறைவனின் முதலாவது தண்டனையாகும்.
எனவே வெற்றிபெற்ற எமது ஊரின் சிங்கங்கள் எவருடனும் எந்த கட்சியுடனும் இணைந்து ஆட்சியமைக்காமல் தமது ஒரே இலட்சியமான தனியான
உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரை எத்தடைகள் வந்தாலும் அவற்றை இறைவனின் உதவியுடன் தகர்த்தெறிந்து
வெற்றி காண்போம் என உறுதி புண்டுள்ளனர்





Post a Comment