Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

இனவாதத் தீ காவுகொண்ட "அப்துல் பாஸித்"; திகனையெங்கும் சோகம் !

திகன உள்ளிட்ட பிரதேசங்களில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இனவாதத் தாக்குதலில், திகன பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய முஸ்லிம் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

திகன பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள வீட்டில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த, அப்துல் பாஸித் எனும் இளைஞரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
மேற்படி இளைஞரின் பல்லேகல கடை மீது – நேற்றைய தினம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதோடு, சிங்களக் காடையர்கள் தீ வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னர், இன்று செவ்வாய்கிழமை காலை – பல்லேகல கடைக்கு குறித்த இளைஞரின் சகோதரர்கள் சென்று பார்த்தபோது, பாஸித் எனும் இளைஞர், மரணித்த நிலையில் அங்கு காணப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மரணமடைந்த இளைஞரின் உடலில் தீக்காயங்கள் ஏதும் இல்லை எனத் தெரியவருகிறது.

இதனையடுத்து, திகன பிரதேசத்தில் பதட்ட நிலையொன்று உருவாகியுள்ளது. இதனால், அங்கு ஊரடங்குச் சட்டத்தினை பொலிஸார் அமுல்படுத்தியுள்ளனர்.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget