கிழக்கின்
பழமையும் பிரபல்யமும் மிக்க அமைப்புகளில் ஒன்றான கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.வை.எம்.சலீம்
(கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர்) தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு
மண்டபத்தில் அண்மையில்
இடம்பெற்றது.
ஒன்றியத்தில்
நிர்வாகப்பணிப்பாளர் யூ.கே.காலித்தீனின்
வழிநடத்தலில் இடம்பெற்ற குறித்த இப்தார் நிகழ்வில் அஷ்செய்க் ஏ.எம்.மஹ்றுப்
(ரஹீமி) மார்க்க சொற்பொழிவாற்றினார்.
நிகழ்வுக்கு
கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள், நிறுவனங்களின் தலைவர்கள், வர்த்தக பிரமுகர்கள் , கல்வியாளர்கள்
, இளைஞர்கள் ,ஊர்ப் பிரமுகர்கள்
, ஊடகவிலாளர்கள் , ஒன்றியத்தின்
அங்கத்தினர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.










Post a Comment