Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சாய்ந்தமருது பிரதேச செயலக இப்தார் நிகழ்வு!!!


(எம்.வை.அமீர் )
வருடா வருடம்  சாய்ந்தமருது பிரதேச செயலகத்தால் நடாத்தப்படும் இப்தார் நிகழ்வின் இந்த ஆண்டுக்கான நிகழ்வு  அண்மையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் .எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்றது.
பிரதேச செயலக நலன்புரி ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கலாச்சார உத்தியோகத்தர் அஷ்செய்க் .எச்.அஹமட் அம்ஜத் (நளிமி) மார்க்க சொற்பொழிவாற்றினார்.
சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் .எல்.எம்.சலீம் மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எம்.எம்.ஹனிபா,எம்.எம்.நஸீர், சாய்ந்தமருது பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி .எல்.எம்.அஜ்வத் உள்ளிட்ட அதிதிகளும் பிரதேச செயலக கணக்காளர், அடங்கலான உயர் அதிகாரிகளும் சாய்ந்தமருது பிரதேச செயலக ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget