கல்முனை
ஸாஹிரா தேசியக் கல்லூரியில் கல்வி கற்ற 2001 ஆம் ஆண்டு தொகுதி மாணவர்களை பிரதானமாக கொண்ட கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி பழைய மாணவர் அமைப்பு ( ZOPA )ஒழுங்கு செய்திருந்த ஸாஹிரா பழைய மாணவர்களின் எண்ணக்கருவில்
திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட
ஸஹிரியன்
பிரிமியர் லீக் கிறிக்கட் சுற்றுப் போட்டி 2018 இன்று ( 22 ) கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி
மைதானத்தில் மிகவும் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்லூரி அதிபர்
எம்.எஸ்.முஹம்மட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி முதல் நாள் ஆரம்பவிழா நிகழ்வில் சியபத
பினான்ஸ் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் மஞ்சுல ஜயதிலக பிரதம அதிதியாக கலந்து
கொண்டார்.
முதலாவது
போட்டியில் ஸஹிரியன் 98 அணியை எதிர்த்து ஸஹிரியன் யுனைடெட் அணி போட்டியில் ஈடுபட்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஸஹிரியன் 98 அணி 8 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து
48 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸஹிரியன் யுனைடெட் அணி 6.2
ஓவர்களில் 2 விக்கட்டுக்களை இழந்து 49 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கட்டுக்களினால் வெற்றி
பெற்றது.
இரண்டாவது
போட்டியில் அலியார் ரெஜிமென்ட் அணியை எதிர்த்து ஸஹிரியன்ஸ் லயன்ஸ் அணி போட்டியில் ஈடுபட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய
அலியார் டெஜிமன்ட் அணி 8 ஓவர்களில் 68 ஓட்டங்களைப் பெற பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய
ஸஹிரியன்ஸ் லயன்ஸ் அணியும் 8 ஓவர்களில் 68 ஓட்டங்களையே பெற்றமையால் போட்டி சமனிலையில்
முடிய இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் அலியார்
ரெஜிமென்ட் அணி வெற்றி பெற்றது.
மூன்றாவது
போட்டி கண்காட்சி கிறிக்கட் போட்டியாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் 1990 ஆம்
ஆண்டு தொகுதி மாணவர்களை எதிர்த்து 2000 ஆம் ஆண்டு தொகுதி மாணவர் அணி போட்டியில் ஈடுபட்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய
1990 ஆம் ஆண்டு தொகுதி மாணவர் அணி 6 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 36 ஓட்டங்களைப்
பெற்றனர்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய
2000 ஆம் ஆண்டு தொகுதி மாணவர் அணி 2.2 ஓவர்களில் 1 விக்கட்டை இழந்து 40 ஓட்டங்களைப்
பெற்று 9 விக்கட்டினால் வெற்றி பெற்றது.1990
ஆம் ஆண்டு தொகுதி அணியில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களும் கலந்து கொண்டு
விளையாடியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மற்றை அணிகளுக்கிடையிலான
போட்டிகள் ( 23 ) சனிக்கிழமையும் கால் இறுதி , அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள்
( 24 ) ஞாயிற்று கிழமையும் இடம்பெறவுள்ளன. இறுதிப் போட்டியில் பிரிவெல்த் குளோபல் நிறுவனத்தின்
தவிசாளர் ஸிஹாப் ஸரீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.














Post a Comment