Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

ஸஹிரியன் பிரிமியர் லீக் ( ZPL )கிறிக்கட் சுற்றுப் போட்டி 2018


( எம்.ஐ.எம்.அஸ்ஹர் , எம்.எம்.ஜபீர் , எம்.எஸ்.எம்.றம்ஸான் , அஸ்லம் எஸ்.மௌலானா )
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் கல்வி கற்ற 2001 ஆம் ஆண்டு தொகுதி மாணவர்களை பிரதானமாக கொண்ட கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி பழைய மாணவர் அமைப்பு ( ZOPA )ஒழுங்கு செய்திருந்த ஸாஹிரா பழைய மாணவர்களின்  எண்ணக்கருவில் திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டு  வடிவமைக்கப்பட்டுள்ள  ஸஹிரியன் பிரிமியர் லீக் கிறிக்கட் சுற்றுப் போட்டி 2018 சம்பந்தமான பத்திரிகையாளர் மகாநாடு , சுற்றுப்போட்டிக்கான உத்தியோக புர்வ சீருடை அறிமுகம் மற்றும் இப்தார் நிகழ்வு என்பன இன்று சாய்ந்தமருது ஸீ பிரீஸ் ரெஸ்ட்ரோரண்டில் இடம்பெற்றது.
கல்முனை ஸாஹிரா தேசிக் கல்லூரி அதிபர் எம்.எஸ்.முஹம்மட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஏற்பாட்டுக்குழுவின் பணிப்பாளர்களான  எம்.எச்.எம்.றிம்ஸாத் மற்றும் ஏ.எச்.எம்.இம்தியாஸ் ஆகியோர் கருத்து தெரிவிக்கையில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் கல்வி கற்று இன்று நாட்டின் நாலா புறங்களிலும் கடல் கடந்தும்  சிறந்த நிலையிலுள்ள பழைய மாணவர்களை விளையாட்டின் மூலம் விட்டுச் சென்ற பழைய பாடசாலை உறவுகளை ஓரிடத்தில் கைகோர்க்கச் செய்து பழைய பாடசாலை நினைவுகளை மீட்டுக் கொள்ளும் சந்தர்ப்பததை ஏற்படுத்திக் கொடுக்கும் அதே வேளை தமக்கு கல்வி கற்றுத் தந்த ஸாஹிரா அன்னைக்கு தம்மாலான கல்வி மற்றும் விளையாட்டுத்துறைக்கும் பாடசாலையில் கல்வி கற்கும் வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவும் வகையிலும்   இம்மாதம் 22, 23 , 24 ஆம் திகதிகளில் கல்லூரி மைதானத்தில் 8 ஓவர்கள் கொண்ட 11 பேர் கலந்து கொள்ளும் கிறிக்கட் சுற்றுப் போட்டியொன்றினை விலகல் முறையில் (nock-out  )நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 1998 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டு வரை க்கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்களை உள்ளடக்கிய 20 அணிகள் இச்சுற்றுப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளன.
குழு நெப்ரியுனில் ( Neptune   ) கஜபா 08 , கிறிக் 90 , அரேபியன் புள்ஸ் , ரீம் 92 2011 , மெக்ஸ் சாஜேர்ஸ் அணிகளும் , குழு ஜுபீடரில் ( jupiter ) பும் பும் 03 , அலியார் றெஜிமென்ட் , பீ 05 2005 ,ஸஹிரியன் லயன்ஸ் , சுப்பர் வொரியர்ஸ் அணிகளும் , குழு மார்ஸ்( Mars) இல் ஸஹிரியன் 98 , ஸெஸ்டோ 99 , ஸஹிரியன் வைருகே , கிளஸிகல் ஸீரோ வன் , ஸஹிரியன் யுனைடெட்  அணிகளும் , குழு வீனசில் ( venus ) கிளாஸ் ஒப் 13 , லெஜன்ஸ் ஒப் ஸஹிரியன்ஸ் , ஸஹிரியன் விக்கிங்ஸ் , ஸஹிரியன் ரெட் பேக்ஸ் , ஸஹிரா சுப்பர் கிங்ஸ் அணிகளும் பங்கேற்கவுள்ளன.
மொத்தம் 20  போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில் சம்பியன்களாக தெரிவு செய்யப்படும் அணிக்கு சம்பியன் கிண்ணத்துடன் 10,000 ரூபா பணப்பரிசும் , பதக்கங்களும் ,இரண்டாம் இடம்பெறும் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 5,000 ரூபா பணப்பரிசும்  பதக்கங்களும் , ஒவ்வொரு போட்டியின் போதும் சிறப்பாட்டக் காரார் விருதும்  ,சுற்றுப் போட்டி தொடர் ஆட்டநாயகன் விருதும் , இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்படுவதுடன் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக கால் இறுதிப் போட்டி , அரை இறுதிப் போட்டி மற்றும் இறுதிப் போட்டிகளின் போது பார்வையாளர்களாக கலந்து கொள்வோருக்கு மைதானத்திற்கு வெளியால் செல்லும் பந்தை  பிடித்தால் ஒவ்வொரு பிடியெடுப்பிற்கும் பெறுமதியான பரிசில்களும் வழங்கப்படவுள்ளன. 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி தற்போது 70 வருடங்களை அண்மித்துள்ள நிலையில் இக்கல்லூரியிலிருந்து 20,000 மாணவர்கள் கல்வி கற்று வெளியேறியுள்ளனர். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள மேற்படி சுற்றுப் போட்டி 2020 ஆம் ஆண்டு மின்னொளியில்  இடம்பெறுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.
22.06.2018 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள  ஸஹிரியன் பிரிமியர் லீக் 2018 கிறிக்கட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வாக 1990 ஆம் ஆண்டு தொகுதி மாணவர் அணிக்கும் ஏற்பாட்டு குழு அணிக்கும் இடையில் கண்காட்சி கிறிக்கட் போட்டியொன்றும் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சபை பிரதி தலைவர்கள் ,விளையாட்டு உத்தியோஸ்தர் ஏ.எம்.றிபாஸ்  , பாடசாலை விளையாட்டு பொறுப்பாசிரியர் அலியார் பைஸர் ,சுற்றுப்போட்டி அணிகளின் பிரதிநிதிகள்  , ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.  சுற்றுப் போட்டியின் பணிப்பாளர்களுள் ஒருவரான எம்.எம்.மவ்சூம் நன்றியுரையினையும் வழங்கினார்.

Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget