சம்மாந்துறை
வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் சனிக்கிழமை ( 28 ) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும்
இருவர் பலத்த காயங்களுடன் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட மற்றுமொருவர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தியும் சிகிச்சை பயணளிக்காததினால் வைத்தியசாலையலேயே உயிரிழந்துள்ளார்.
கண்டி உடுநுவர
,தௌலகல பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மட் லாபிர்( 54 வயது ) மற்றும் அவரது மனைவி கண்டி உடுநுவர – அல் மனார் தேசிய
பாடசாலை ஆசிரியை பாத்திமா ஸியானா ஆகியோர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும்
தங்களது மகளை பார்வையிடுவதற்காக ஒலுவிலை நோக்கி அம்பாறை – கல்முனை பிரதான வீதியில்
வானில் பயணிக்கும் போது அம்பாறையை நோக்கி பயணித்த
டிப்பர் லொறியொன்றுடன் அம்பாறை – கல்முனை பிரதான வீதியிலுள்ள புகை பரிசோதனை நிலையத்திற்கு
முன்பாக நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து
சம்பவித்துள்ளது.
இதே வேளை
இவர்களது வேனில் பயணித்த உறவினரான முஹம்மது நிஸாம் முஹம்மது மின்ஹாஜ் பலத்த காயங்களுடன்
வைத்தழயசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்தில்
மரணித்த இருவரின் உடலங்களும் அம்பாறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து
சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை மற்றும் அம்பாறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment